Posts

Showing posts from April, 2015

தந்தை செல்வா நினைவு பேருரை

Image
தந்தை செல்வா நினைவு பேருரையாற்ற முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டது, சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதின் நீட்சியாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளிற்கும் தமிழரசு கட்சியின் தலைமையின் புரிதலிற்கும் இடையிலான இடைவெளியின் நீட்சியாகவும் வெளிப்படுகிறது.

1994ல் "சமாதான தேவதையாக" அவதாரம் எடுத்த அம்மையார் ஆட்சியில் தான் யாழ்ப்பாணம் பறிபோக கிரிஷாந்தி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டது மறைக்கபடமுடியாத வரலாறு.

1999ல் "அருந்தப்பு தப்பிய" அம்மையார், புலிகள் "உபயத்தில்" ஆட்சி கட்டிலில் மீண்டும் ஏறி, 2002ல் ஏற்பட்ட ரணில்-பிரபா சமாதான உடன்படிக்கையை குழப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டார். 31 ஐப்பசி 2003ல் விடுதலை புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழியப்பட்டு, நாலாம் நாள் ரணில் ஆட்சியை குழப்பி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆப்பு வைத்தது மறக்கப்பட முடியாத வரலாறு.

2000ம் ஆண்டு மலர்ந்து ஐந்நாம் நாள் சிங்கத்தின் குகைக்குள் இருந்து உறுமிய புலி, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை படுகொலை செய்ததில் அம்மையாரின் பங்கை Sun…