Posts

Showing posts from May, 2015

மாஸ் என்கின்ற மாசிலாமணி

Image
பேய் உலாவிற சனிக்கிழமை இரவில
பேய் குளிரடிக்கிற மெல்பேர்ண் இரவில
பேய(ர)ழகி நயன்தாராவை பார்க்கிற ஆசைல
பேய்த்தனமா மனிசியை விட்டிட்டு படம் பார்க்க போனேன். மாஸ் என்கின்ற மாசிலாமணி (MEM) தமிழ் சினிமாவிற்கு இது பேய்ப்பட ஸீஸன். இந்த பேய் மோகத்தில் வெங்கட் பிரபு விழுந்து விசர்படங்கள் நடித்துக்கொண்டிருந்த பேயன் சூர்யாவை வைத்து எடுத்த பேய் படம் MEM. ஈழத்தமிழரை பேய்க்காட்ட கனடா தமிழரா ஒரு சூர்யா வந்து எங்கட வலியை திரையில் ஒரு வசனத்தில் சொல்லுறாராம். வழமையா இப்படியான சீனிற்கு கை தட்டுற எங்கட சனம், இப்ப எங்களை பேய்க்காட்டுறாங்கள் என்று தெரிந்ததால பேசாமல் இருந்திட்டுதுகள். எங்களை பேயனாக்கி படம் ஓட்டுற பேய்க்காட்டலை கோடம்பாக்கம் இனியாவது நிறுத்தணும். நயன்தாரா நயன்தாரா என்ற பேய(ர)ழகியை படத்தில காணவில்லை. நயன்தாராவிற்கு பேய் கரெக்டர் இல்லாத்தால கனக்க ஸீன் குடுக்கல்லயோ ? இல்லாட்டி பிரேம்ஜி தான் ஹீரோயினோ ? நயன்தாரா படம் என்டு சொல்லி பேய்க்காட்டி போட்டான்கள், பேய் விசரன்கள். யுவன் சங்கர் ராஜா கொஞ்ச காலமாகவே மொக்கை இசை தந்தவர் இந்த படத்தில பேய்த்தனமா இசை அமைச்சிருக்கிறார். வெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்க போய…

இயக்கங்கள் & பட்ட பெயர்கள்

Image
80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம்.
மோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம்.
இந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்..
TELO - ரயில் பயணங்கள்
ரயில்களில் பயணிக்கும் ஆமிக்காரரை குறி வைத்து நடாத்திய சில தாக்குதல்களை மையமாக வைத்து..,
PLOTE - விடியும் வரை காத்திரு
இயக்களுங்குள் பெரிய இயக்கம், கெரில்லா பாணி தாக்குதல்களில் பெரிதாக ஈடுபடாமல், மக்கள் புரட்சியை ஏற்படுத்தி எல்லா ஆமி காம்பையும் ஓரேயடியா அடித்து நொறுக்கோணும் என்ற சித்தாந்தத்தில் இயங்கியதாக கருதப்பட்ட இயக்கம்..
EPRLF - தூறல் நின்று போச்சு
இராணுவ தளபதி தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் …

நான் சமைத்தேன் omelette

Image
முக்கோணமாய் விறகடிக்கி
சாதுவா மண்ணெண்ணை தெளித்து
நைசாக பொச்சுமட்டை செருகி
சூர்யா மார்க் தீப்பெட்டியில் உரசி
அடுப்பு மூட்டி 
பொரியல் சட்டி வைத்து ம்கூம்.. அதெல்லாம் இல்லாமல் Style ஆக Fisher & Paykel cooktopல்
அலுங்ககாமல் switch போட்டு
Jamie Oliver saucepanஐ
நலுங்காமல் வைத்து
Meadowlea butter தடவி
வலக்கையில் free range முட்டை எடுத்து
இடக்கையிலிருந்த stainless steel கரண்டியால் உடைத்து
Iodised உப்பு தூவி
பதமாய் புரட்டி எடுத்து நான் சமைத்தேன் omelette ! சமைக்க தெரியாது என்று
குற்றம் சாட்டுபவர்களிற்கு அர்ப்பணம்
டீ போட தெரியாது என்று
நக்கலடிப்பவர்களிற்கு சமர்ப்பணம் The journey has just begun... When is the next Master Chef comp ?

உத்தம வில்லன்

Image
நான்கு ஜாம்பாவான்களின் படைப்பு ஓகே கண்மணி.
ஒரு நிருத்தஞ்சய*படைப்பாளியின் ஜாம்பவ படைப்பு உத்தம வில்லன்.
"எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூடம் போதும்
குப்பை கொண்ட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்"
கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், இசை, கவிதை, பாடல், கதாநாயகன், வில்லன், காமெடியன் என இன்னாரென்ன திரையிலும் திரைக்கு பின்னாலும் "உத்தம வில்லனில்" ஆல் இன் ஆல் அழகுராஜா கமல்ஹாசன் தான்.
"நீ தொடாத உச்சம் உண்டா
சாதனைகள் மிச்சம் உண்டா
நான் கரைந்தேன் உன்னை கண்டால்"
நகுலேஸ்வரன் மாஸ்டர்ட டியூடரியில் கலைவிழாவிற்கு வில்லுப்பாட்டு செய்த பிறகு அதன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு யாழ்ப்பாணத்தில் என் பாட்டாவோடு பல அருமையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை காணவைத்தது. உத்தம வில்லன் மூலம் அருகி வரும் அந்த கலையை மீண்டும் ஒருமுறை ரசிக்கும் வாய்ப்பு கிட்டியது.
"தானதந்தத்டோடு எழு
சந்தங்களும் தாழத்தொடு
சந்தங்களும் தாழத்தொடு
வான வம்பை உருவித்த கை
முன் தூமியோடு (ஆமா)
முன் தூமியோடு
அத்தனையும் மேளத்தோடு"
மன்னரை கக்கூஸிற்கு பல்லக்கில் அழைத்து செல்லும் காட்சி நம்ம JK யின் &quo…