Posts

Showing posts from June, 2015

Amazing Grace

Image
"Amazing Grace" one of the most powerful Christian hymns has been sung amazingly by the most powerful man on earth, Barak Obama and the 2 most powerless men, Andrew Chan and Mayuran Sugumaran, in the last couple of months. Obama has delivered the eulogy at the service for the church leader who was among nine people shot dead during attack on the bible study group at a historic African-American church. The hymn Amazing Grace which convicted drug traffickers Mayruan and Andrew sang while being executed was ironically written by a former slave trader called John Newton. The hymn was written for the New Year's Day sermon in 1773. The hymn illustrates the message that forgiveness and redemption are possible regardless of sins committed and that the soul can be delivered from despair through the mercy of God. Our prayers are with the Christians who are being persecuted in many parts of the world. "We’ve no less days to sing God’s praise"

Commerceகாரர்

Image
முற்குறிப்பு 🌛
தம்பி JK Maths காரரை மையமாக வைத்து கடந்த வாரம் "சப்பல் மன்னர்கள்" வரைந்தார், என்னையும் commerce காரரை பற்றி எழுதுமாறும் கேட்டுக்கொண்டார். புலியை பார்த்து ஏதோ ஒரு மிருகம் தனக்கும் வரி வரைந்து கொண்டதாம். அதைப்போல ஈழத்து சுஜாதா ஜேகேயின் "சப்பல் மன்னர்களை" தழுவி கொழும்பில் commerce படித்த என் அனுபவத்தை மையப்படுத்தி நான் வரைந்த உளறல். 🚯 குற்றம் பொறுத்தருள்க...

கொமர்ஸ்காரர் 💰கொமர்ஸ்காரர் ஒரு தனி ரகம், அவர்களும் ஒரு வகை மன்னர்கள் தான், சப்பலில் அல்ல, A/L வாழ்க்கையை அனுபவித்ததில் அவர்கள் தான் உண்மையான A/L மன்னர்கள். படிப்போடு நல்லா பம்பலடிக்கவும், ஸ்டைலா பெட்டையளை சுழற்றவும் தெரிந்த, சூப்பர்காய்கள்.

O/L முடித்து Commerce படிக்க வாற குறூப்புகள் பலவகை.

முதலாவது குறூப் commerceல் கண்டதும் கொண்ட காதலால் படிக்கவாற கோஷ்டி. O/L ல் அநேகமா ஒகஸ்ரின் மாஸ்டர் மாதிரி ஆக்களிட்ட படிச்சு, கணக்கியலில் வசியப்பட்டு வாற சனம். இவர்கள் கண்ணும் கருத்துமாய் படிப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் tuitionலும் ஒரு சொல்லு விடாமல் notes எடுப்பார்கள், part 1 க்கு வேற part 2 க்கு வேற, school…

லண்டன் பேச்சுவார்த்தை

Image
இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரிற்கும் உலக தமிழர் பேரவை (GTF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பிரதிநிதிகளிற்கும் சர்வதேச அனுசரணையில் (எதிரி #126 தென்னாப்பிரிக்கா, ++) நடைபெற்ற லண்டன் சந்திப்பு வரவேற்கப்பட வேண்டியது தான் (note the "தான்" யுவர் ஆனர்). எதிரியோடு களமாடுவது அவசியமானது, விலகி ஓட முடியாது, ஒளித்து பிடித்து விளையாட முடியாது, படலைக்கு மற்ற பக்கம் நின்று கத்திக் கொண்டு நிற்க இயலாது. தீர்வு ஒன்று வேண்டும் என்றால் சண்டைக்காரனோடு "களமாடத்தான்" வேண்டும். அந்த களம் போர்முனையாகவும் பேச்சுவார்த்தையாகவும் வடிவம் பெறும். இந்த சந்திப்பை, நடக்க முதலே எதிர்த்தவர்கள் இருவர், EPRLF சுரேஷ் & TELO சிவாஜி. நிலாந்தன் எழுதின மாதிரி "28 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் விசுவாசிகளாகப் பார்க்கப்பட்டவர்கள் இப்பொழுது மேற்கின் விசுவாசிகளை அம்பலப்படுத்துகிறார்கள்". புலிகளால் அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஞானஸ்னானம் பெற்ற, born again தமிழ் தேசியவாதிகளான இவர்களின் கருத்தின் பெறுமதி தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். பாவம்...சொல்லிட்டு போகட்டும்.ச…

என் இனிய மகிக்கு

Image
என் இனிய மகிக்கு,



உனக்கு அகவணக்கம் செலுத்தி விளக்கு வைக்க ஒரு கூட்டம் துடியாய் துடிப்பதை, ஆர்ப்பரிப்பதை நினைத்து விசனத்துடன் இந்த மடல் வரைகிறேன். உன்னை முதன் முதலாக நான் சுவைத்தது 1985ல் யாழ்ப்பாணத்தில் தான். அந்த காலத்தில் Australia விற்கு போய்ட்டு வந்த அம்மம்மா 2 பக்கற் கொண்டுவந்து எனக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று தந்தவ. நாங்க 2 பேரும் எட்டிய புரிந்துணர்வு உடன்படிக்கை - ஒன்றை 2ஆ பிரித்து சாப்பிட்டால் 2 நாள் 2 பேரும் சாப்பிடலாம். முதல் நாள் உன்னை தயார் செய்து எடுப்பெடுத்து விறாந்தைல சாக்கு கட்டலில இருந்து சாப்பிட்டு கொண்டிருக்க Old Parkற்கு குண்டு போட வந்த பொம்மர் விதான்ஸ் லேனுக்க அடித்த அதிர்ச்சியில் சாப்பிட்ட அரைவாசி கோப்பை கவிழ்ந்திட்டுது. அறுவான்கள்... அன்றைக்கு பிடித்தது இந்த மகி மோகம். "எந்த பெண்ணிலும் இல்லாத ஓன்று" மாதிரி..நீ எனக்கு. இப்படித்தான் 1987ல் உன்னை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பின்னேரத்தில தான் வித்தியாசமான சத்தத்துடன் புது பொம்மருகள் வந்து குண்டு போடாமல் மூட்டை மூட்டையா ஏதோ போட்டாங்கள். இரவு 7.15 ஆகாசவாணி செய்தி கேட்கேக்க தான் வந்தது இந்தியன்ட …

SJC 92 KL Birthday Bash

Image
Two years ago on 6 June 2013, 53 top notch boys from the hallowed Jaffna St John's College AL 1992 batch gathered for their "pilgrimage" in Kuala Lumpur. The event was themed "KL Bash" and the participants descended from 7 countries for this once in a life time event. "சுடு பாடு helicopter confrontation இடப்பெயர்வு கலவரம் isolation
shell அடி bomber அடி toleration - இன்று
cum laude, honors என்று graduation" St. John's College Jaffna was established in 1823 by Rev Joseph Knight of the Anglican Church Missionary Society. St. John's is not just a school, it is an institution which transforms boys to become gentleman. "SJC எங்கள் education
92 batch ஒரு sensation
discipline எங்கள் foundation - இன்று
உலகில் நாம் ஒரு generation" DJ Swamy's theme song was a major hit before the event and was instrumental in creating the momentum. The lyrics for the song was written by Ramoshan. சுடச்சுட சுடச்சுட கச்சான் கிழவி
அடி அடி அடி பின்னும் பிரம்படி…

Vijay TVயின் மகாபாரதம்

Image
ஆய்ஷ்மான் பவ... நான் விரும்பி ரசித்த Vijay TVயின் மகாபாரதம் ஒரு வழியாக பார்த்து முடிச்சாச்சு. நான் மகாபாரதம் பார்த்த கதையும் மகாபாரதம் போல் நீண்டது நெடியது. அதை விடுவம். "அகிலம் போற்றும் பாரதம், 
இது இணையில்லா மாகாவியம்" வழமையா ஒன்றில பிடிச்ச விஷயத்தை பற்றி தான் கனக்க கதைப்பம், பீத்தி தள்ளுவம். மகாபாரதத்திலும் அனுதாப வாக்கு வாங்கும் மித்திரன் கர்ணணோ, உலகின் தலைசிறந்த வில்லாலன் விஐயனோ, அல்லது பாண்டவர்களின் தத்துவாசிரியர் & strategist Lord V. கிருஷ்ணன் (இயக்கப்பெயர் கண்ணன்) தான் வழமையான ஹீரோக்கள். இந்த பதிவு எனக்கு பிடித்த கதாபாரத்தை பற்றியதல்ல. மாறாக மகாபாரதம் பார்த்தபோது என்னை மிகவும் வெறுக்க வைத்த பாத்திரம் திரெளபதி பற்றியது. "தர்மம் இங்கு பலியானதே" துரியன் அநியாயத்தின் உருவமாய் அதர்மியாய் உலாவந்தாலும் அவனது கம்பீரமும் விட்டு கொடாமையும் பின்வாங்காத்தன்மையும் அவனை வெறுக்க வைக்கவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.. "அதர்மம் இங்கு வெற்றியை பற்றியதே" சகுனியின் சதிகள் வியக்கவும் வியர்க்கவும் ரசிக்கவும் ரத்தம் கொதிக்கவும் வைத்தாலும் அவனை வெறுக்க வைக்கவ…