Posts

Showing posts from July, 2015

தேர்தல்: அன்றும் இன்றும்

Image
1977 பொது தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 1982 சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிக்கப்பட்டு, 1989 ஜனவரியில் பிரேமதாச ஜனாதிபதியாக, அதே ஆண்டு காதலர் தினத்துக்கு அடுத்த நாள் (15-2-1989) பொதுதேர்தல் நடாத்தப்பட்டது.


முதல் முறையாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 11. இந்த ஆசன எண்ணிக்கை குடித்தொகையை அடிப்படையாக கொண்டது. இடப்பெயர்வுகளாலும் புலம்பெயர்தலாலும் 2001ல் 9ஆக சுறுங்கிய ஆசனங்கள் 2015ல் 7ஆக குறைவடைந்து விட்டது. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் வாழும் மக்கள் எண்ணிக்கை குறைய குறைய ஆசனங்களும் குறைய குறைய குடாநாட்டிற்கு வெளியே வாழும் "தேர்தல் வழிகாட்டிகள்" மட்டும் கூடிக் கொண்டே இருக்கிறார்கள்.

1989 தேர்தலில் வட கிழக்கில் இந்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் தமிழர் விடுதலை கூட்டணி (TULF), EPRLF, TELO, ENDLF இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி அமைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த மூன்று இயக்கங்களும் அன்று ஆயுதம் தரித்த ஒட்டு குழுக்களாக இந்திய படையினருடன் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த காலம். த்…

கறுப்பு ஜூலை

Image
சனிக்கிழமை 23 ஜூலை 1983, நள்ளிரவு  
யாழ்ப்பாணம் வரலாற்றில் முதல்முறையாக குண்டு சத்தத்தால் அதிர்ந்தது. அதற்கு பிறகு அதைவிட பன்மடங்கு சத்தங்களையும் அவலங்களையும் காணப்போவதை அறியாது யாழ்ப்பாணம் பதறியடித்து எழும்பியது. என்ன ஏதுவென்றறியாது விழித்தெழுந்த மக்களிற்கு துப்பாக்கி சத்தங்களும் கேட்டன. ஆனால் அந்த முதல் அதிர்வின் ஓசை மட்டும் அந்த இரவில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலரின் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

தலைவர் பிரபாகரன், கிட்டு மாமா, விக்டர்,புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோஷம், அப்பையா ஆகியோரை அடங்கிய விடுதலை புலிகளின் அணி, பலாலியிருந்து குருநகர் நோக்கி செல்லும் Four Four Bravo என்ற இராணுவ ரோந்து அணியை திருநெல்வேலி தபால் கட்டை சந்திக்கருகில் கண்ணிவெடி வெடிக்கவைத்தும் துப்பாக்கிகள் கொண்டும் தாக்க.. 13 இராணுவத்தினர் பலி, செல்லக்கிளி வீரமரணம்.

அடுத்த நாள் ஜூலை 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, இலங்கை இராணுவம் ஆடிய கொலைவெறி தாண்டவத்திற்கு, இந்த விஷயம் தெரியாமல் டியூஷனிற்கும் தேவாலயத்திற்கும் வேலைக்கும் போக வீதியில் இறங்கின சனங்களும் சம்பவ இடத்திற்கருகில் வீடுகளில் இருந்த சனங்களும் நூ…

நஞ்சுண்ட காடு

Image
1980களின் நடுப்பகுதியில் இந்திய அரசு விடுதலை இயக்கங்களிற்கு ஆயுத பயிற்சி அளிக்க தொடங்கிய காலத்தில் பயிற்சி முகாம் வீடியோக்கள் எல்லா இயக்கங்களாலும் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்பட்டன. அதில் அணி அணியாக போராளிகள் ஓடுவார்கள், நெருப்பு வட்டத்திற்குள்ளால் பாய்வார்கள், குறி தவறாமல் சுடுவார்கள்,  மகிழ்ச்சியாக தென்படுவார்கள்.
1990களில் விடுதலைப் புலிகள் தங்களது தாக்குதல்களை கமராவிற்குள் பதிவு செய்ய நிதர்சனத்தில் ஒரு பிரிவையே உருவாக்கினார்கள். அந்த தாக்குதல் வீடியோக்கள் தாக்குதல்களை தலைமை மீளாய்வதற்கும்,  புதிய தாக்குதல்களை திட்டமிடவும் பயன்பட்டதோடு, வரலாற்று பதிவாகவும், தாயகத்தில் ஆட்சேர்ப்பிற்கும்,  புலத்தில் நிதி சேகரிப்பிற்கும் பயன்பட்டன. யுத்த களங்களில் புலிகள் ஈட்டும் வெற்றிகளிற்கு பின்னால் கடுமையான பயிற்சியும் திட்டமிடலும் வேவுத்தகவல்களும் இருக்கும். "கடுமையான பயிற்சி இலகுவான சண்டை" என்பது புலிகளின் தாரக மந்திரங்களில் ஒன்று.
1990களின் விடுதலைப்புலிகளின் பயிற்சி பாசறையை களமாக, மையமாக வைத்து போர்க்கால இலக்கியமாய் குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடு" எனும் நாவல் உருப்பெறுகிறது.…

தங்கராஜா டீச்சர்

Image
திருமதி பத்மா தங்கராஜா, 
பொடியள் வைத்த பட்டபெயர் சுடுதண்ணி, அது அவவுக்கும் தெரியும், எனக்கு டீச்சர்.கொழும்பு இந்து கல்லூரியில் கொமர்ஸ் இராஜ்ஜியத்தை பல ஆண்டுகள் கட்டி மேய்த்து பலரை ஆளாக்கிய பெருமைக்குரியவர்.
என் வாழ்க்கையை புரட்டி போட்டதில் டீச்சரிற்கு பாரிய பங்குண்டு. தன்னம்பிக்கை ஊட்டி, எனக்காக வாய்ப்புக்களிற்கு கதவுகளை அடித்து திறந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டிய டீச்சரை கொழும்பிற்கு எப்ப போனாலும் மறக்காமல் சந்திப்பேன். டீச்சர் இன்னும் மாறவில்லை, என்னை இன்னும் A/L பொடியன் மாதிரி தான் நடத்துவா.. 
கொழும்பு இந்துவில் முதலாவது மாதம், Russian Embassy நடாத்திய quiz போட்டியில் கல்லூரி அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒரு நாள் டீச்சிரிடம் கதைக்கும் போது பரி யோவான் கல்லூரி quiz teamல் நானிருந்ததை சொல்ல, மேல் மாகாண தமிழ் பாடசாலைகளிற்கிடையிலான quiz போட்டியில் பங்குபற்றிய கல்லூரி அணியில் ரமோ, மொழியனுடன் எனக்கும் இடம் கிடைத்தது. அந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வழிவகுத்தது. 
ஒருமுறை தேசிய மட்ட போட்டிக்கான விண்ணப்பத்தை எடுத்து கொண்டு sign வாங்க, school நேரம், பிரேமதாச…

ஓ காதல் கண்மணி

Image
ஓ காதல் கண்மணி
 No mouse & ஒரு பிளேன் டீ.


சுஹாசினி அக்காக்கு பயந்து mouse பிடிக்காமல் (iPhone ல் விரலால்) இந்த பதிவை, ரஜீஷன் சொன்ன பிளேன் டீ குடித்து கொண்டு வரைகிறேன் (விமர்சனம் எழுத தம்பி Jeyakumaran Chandrasegaram ம் நண்பன் Rajeeshun Arudchelvam ம் இருக்கினம்) மெளனராகம், 1986ல் யாழ்ப்பாணத்தில் deckல் பார்த்த முதல் மணிரத்னம் படம். ஆனா "மன்றம் வந்த தென்றல்" விளங்கினது 1990களில் உருத்திரா மாவத்தையில், அது வேற கதை. அதுக்கு பிறகு சென்சார் பண்ணாத "ரோஜா" 1994 ல் தெஹிவளை கொன்கோட்டில் பார்த்தது தொட்டு எல்லா மணி (அவர் வசனத்தை சுருக்கலாம், நாங்க பெயரை சுருக்க கூடாதா) படமும் தியேட்டர் தான் என்று ஞாபகம். எல்லா மணி படத்தலேயும் எனக்கு மூன்று விஷயம் பிடிக்கும், ஒரு விஷயம் இடிக்கும். பிடித்தது கொல்லும் ரஹ்மானின் இசை, லயிக்கும் காதல் காட்சிகள் மற்றது அழகாக entry குடுக்கும் Train. மெளனராகம் தொட்டு திருடா திருடா, உயிரே, ராவணன் இப்ப OKK வரை கட்டாயம் கோச்சி வரும். இடிக்கிற விஷயம் மணி போறபோக்கில எங்கட போராட்டத்தை பற்றி எறிஞ்சிட்டு போற பீக்குண்டு (உ+ம்: ஆயுத எழுத்தில் வாற செல்வநாயகம்…

பறந்தாலும் விடமாட்டேன்

Image
1996ம் ஆண்டு என்று ஞாபகம், Central Bank அடி விழுந்து Colombo கொஞ்சம் tension ஆக இருந்த நேரம். யாழ்ப்பாண அடிபாடு அறம்புறாமா நடந்து ஒபரேஷன் ரிவிரெச யாழ்ப்பாணத்தை விழுங்கிட்டுது. ஆனா இயக்கம், "குருவிகளை"..அதான் புக்காரா, அவ்ரோ, ஹெலிகளை SAM-7 ஏவுகணையால சுட்டு விழுத்திக்கொண்டிருந்த காலம்.. (மாட்டை மரத்தில கட்டிட்டான்... ) அந்தகாலம் கல் தோன்றி மண் தோன்றா காலம் மாதிரி
Computer தோன்றி email தோன்றா காலம்
Phone தோன்றி mobile தோன்றா காலம்.
Internet, Facebook WhatsApp இல்லாத இருண்ட யுகம்.
(அப்படியா ? அதிசயம், ஆச்சரியம்.. ) ஒரு நாள் மத்தியானம் Union Placeல் இருக்கிற YWCAல் சாப்பாட்டிட்டு திரும்பி வர receptionist சொல்லுறாள், "your pilot friend came to see you. நான் திடுக்கிட்டு போனேன் "I don't have any friend who is a pilot". அவள் விடேல்ல, "no no.. He is a pilot.."
(He is sexy too:) மேசைல வந்திருந்து தலையை பிச்சுக்கொண்டு யோசிக்கிறன். யாரடா அவன் ? அங்கும் இங்கும் நடக்கிறன்.. என்ன இழவுடா
(BGM: டங்க மாரி ஊதாரி track) காலும் ஓடல்ல கையும் ஓடல்ல
பக்கத்தில் இருக்கிற …