Posts

Showing posts from August, 2015

பரி.யோவானில்...தமிழ்

Image
St.John'sல் படித்தவனென்றால் நுனி நாக்கில் English பேசிக்கொண்டு Johnians always Play the game என்று பிதற்றிக்கொண்டு தெரியும் ஒரு கூட்டம் என்ற மாயை உண்டு. Assembly முதற்கொண்டு அநேகமான பாடசாலை அலுவல்கள் ஆங்கிலத்தில் நடைபெறுவதால், English நம்மோடு தானாக வந்து ஒட்டிக்கொள்ளும், வகுப்பில் 75 சதவீத்த்திற்கும் மேலானவர்களிற்கு Englishற்கு O/Lல் D வரும்.

இந்த மாயையை தகர்த்து கல்லூரியில் எமக்கு தமிழ் மொழியை, தமிழ் இலக்கியங்களை ரசித்து ருசித்து கற்பித்தவர்கள் இருவர், பரியோவானின் தலை சிறந்த தமிழ் ஆசான்கள், ஒருவர் சந்திரமெளலீசன் மாஸ்டர் மற்றவர் கதிர்காமத்தம்பி மாஸ்டர். 

Middle schoolல் முதலாவது வருஷம், ராஜசிங்கம் blockல் classroom, மெளலீசன் மாஸ்டர் தமிழ். பம்பலா கதைத்து பெடியளோடு நல்லா முசுப்பாத்தி விட்டு அழகா தமிழ் சொல்லித்தந்தத்தை மறக்கேலாது. தமிழின் இனிமையை எங்களில் விதைத்தவர் சந்திரமெளலீசன் மாஸ்டர். அவர் தமிழ் மொழியை ஆர்வத்தோடு கற்பிக்கும் விதத்தில் ஒரு குழந்தையின் குதூகலம் குடிகொண்டிருக்கும்.

1982ல் நாங்கள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, சிவகுரு மிஸ் திருமணம் முடித்து பரி யோவானை விட்டு விலக, …

கனவான கனவு

Image
1986, மார்ச் மாதம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானம், சென். ஜோன்ஸ் - சென். பற்றிக்ஸ் கிரிக்கட் போட்டி. ஆட்டத்தின் கடைசி ஓவர், சென். ஜோன்ஸ் வெல்ல 7 ரன்கள் தேவை, எடுக்காட்டி ட்ரோ. Robert Williams Hall முனையில் நான் batting, non striker ஆக ஏஞ்சல் நிற்கிறான். கடைசி ஓவர் போட பற்றிக்ஸ் சதா தயாராகிறான். இதுக்கிடையில் தண்ணி கொண்டர வந்த reserve players ஷியாமலையும் மொழியனையும் leg umpire திருப்பி அனுப்பிட்டார். 

Mid pitchல் ஏஞ்சல் சொன்னான் "மச்சான் நீ single எடு, மிச்சத்தை நான் பார்க்கிறன்". 

முதலாவது பந்து சதா outside the off stump போட நான் front footல அழகா straight drive அடிக்க, boundaryக்கு போக வேண்டிய பந்தை mid offல் நின்ற எரிக் நிமலன் விழுந்து மறித்து field பண்ணினான், no run. 

ஏஞ்சலை பார்ப்பதை தவிர்த்து, இரண்டாவது பந்திற்கு இன்னொருக்கா guard எடுத்தன். சதா bowl பண்ண அவன்ட வாயும் ஆ ஊ என்று அசையும், மின்னல் வேக bowler, என்னுடைய நல்ல நண்பன். அடுத்த பந்தை கொஞ்சம் full lengthல் போட காலை முன்னுக்கு வைச்சு cover drive அடிச்சன், 2 runs, boundaryக்கு கிட்ட போன பந்தை இன்பசோதி துரத்தி பிடித்தான்.…

தோற்பது யாராகிலும்....

Image
தேர்தல் திருவிழா இன்னும் சில நாட்களில் ஓய்ந்து திங்கட்கிழமை மக்கள் வாக்களிப்பார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென்பார்கள், நம்மை பொறுத்தவரை வரும் புதன் கிழமை வட கிழக்கிலிருந்து 20-22 பழைய recycled பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக கிடைப்பார்கள். தேர்தல் பரப்புரையின் வீச்சும் தாக்கமும் தாயகத்தை விட புலத்திலும் முகபுத்தகத்திலும் பலமாக இருந்தது. கூட்டத்திற்கு வந்த மக்களை விட முகப்புத்தத்தில் வந்த கூட்டத்தின் படத்தை லைக் பண்ணியவர்கள் அதிகமாக தெரிந்தார்கள். 
இரு தமிழ் கட்சிகளின் வெற்று தேர்தல் விஞ்ஞாபனங்களை யாரும் சீரியசாக எடுத்ததாக தெரியவில்லை, தமிழ் மக்கள் உட்பட. கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினையை முதன்மையாக வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட தென்னிலங்கை கட்சிகள் இம்முறை போகுற போக்கில் தமிழர் பிரச்சினை பற்றி மேலோட்டமாக தொட்டு விட்டு போனது நாம் இழந்த பேரம் பேசும் சக்தியின் வெளிப்பாடு. 2005 சனாதிபதி தேர்தலில் சமஷ்டியை ஏற்றுக்கொண்டு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வு என்று தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட ரணில், இன்று ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். மகிந்தவை பற்றி பேசவோ வேண்டாம்…

பாகுபலி... பலியான தமிழ்

Image
Knoxல் பார்த்த கிரிஷாந்தனும் Houstonல் பார்த்த நிமலனும் கொழும்பில் பார்த்த ரமோவும் ஆகோ ஓகோ, திரையில் பார்க்க வேண்டிய படம், தமன்னா கிமன்னா, அப்பிடி இப்படி என்று சொன்னதை நம்பி, விசுவாசித்து, வாழ்க்கையில் முதல் தடவையாக திங்கட்கிழமை இரவு 9.15க்கு படம் பார்க்க போனேன்.. பாகுபலி. (இப்பவே பிலிம் காட்ட தொடங்கிட்டான்)

"திலீபன் வீரமரணமடைந்து விட்டான்" என்ற வசனம் நித்திரையை கலைத்து 26 செப்டெம்பர் 1987 நினைவில் வர, graphics நீர்மலையின் பிரமாண்டமும் அசர வைக்கும் ஒளிப்பதிவும் ஆஜானுபாகுவான பிரபாஸும், பிரபாஸ் தோளில் தூக்கின கருங்கல் லிங்கமும், சனமில்லாத தியேட்டரும் திரைக்குள் என்னை உள்வாங்கின. (அண்ணே, மாட்டை மரத்தில கட்டல்லயோ)

சோவென கொட்டும் நீர் வீழ்ச்சியும், அடங்கா ஆறும், ஆற்றில் மிதந்து காப்பாற்றப்படும் குழந்தையும் மகாபாரத கர்ணனிலிருந்து பழைய ஏற்பாட்டில் வரும் மோசே தொடங்கி கோச்சடையானில் ராணா தாண்டி பாகுபலியிலும் தொடர்கிறது. சரித்திர கதைகளின் திருஷ்டி பூசணிக்காய் தான் நீர்வீழ்ச்சியோ ?  கருங்கல் லிங்கத்தை பிரபாஸ் தோளில் சுமந்த காட்சி, தமிழினத்தின் மானத்தை தன் தோளில் சுமந்த தானை தலைவனை நினை…