Posts

Showing posts from October, 2015

ஜேகே என்கிற ஜொனியன்

Image
“அவனா, ஒ குமரன், சென்ஜோன்ஸ்ல படிக்கிறாண்டி, கொஞ்சம் திமிர் பிடிச்சவன்”
“இருக்கட்டுமே, அவனிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு, வாடி கொஞ்சம் அவங்கட பக்கமா நகருவம்”
இந்த வசனங்களை தாங்கி வந்த ஒரு பதிவை வாசித்துவிட்டு, அதற்கு சில வாரங்களுக்கு முன்பு அறிமுகமான தம்பி பாலமுருகனை தொடர்பு கொண்டு இந்த ஜேகேயை தெரியுமா அவர் ஜொனியனா என்று கேட்டேன். பாலமுருகனூடாக கிடைத்த ஜேகேயின் நட்பு உண்மையில் ஒரு பொக்கிஷம். 

சென்.ஜோன்ஸில் படித்தவனென்றால் சுட்டு போட்டாலும் தமிழ் வராது என்ற மாயை உடைத்தவர் ஜேகே. பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் தமிழில் பேசினால் பாடசாலை மானத்தை வாங்குகிறோம் என்ற குற்றச்சாட்டு எழும். அதை துணிவுடன் எதிர்கொண்டு முதன்முதலாக மெல்பேர்ண் மண்ணில் தமிழிலும் பேசியவர் பிரேமன் ராஜதுரை. ஜேகே அதற்கும் அப்பால் சென்று பரி யோவான் கல்லூரி காலத்து நினைவுகளை தமிழில் ரசிக்கும்படி பதிவுசெய்து, பதிவிற்கு பதிவு நான் ஜொனியன் என்று முத்திரை பதித்தார். சில பழைய மாணவர்கள் ஜேகே பேசிய கூட்டங்களில் அவரை அணுகி "எப்பிடி இவ்வளவு அருமையாக தமிழ் கற்றீர்கள், உங்களை பார்க்க எங்களுக்கு பொறாமையாக இருக்கு" என்று சொன்னதை காதார க…

நாங்களும் ரெளடிதான்

Image
வெள்ளியிரவு இன்பத்தமிழ் வானொலியின் ஆனந்த இரவை மிஸ் பண்ணிட்டு மிஸ்ஸிஸ்ஸோட பார்த்த மிஸ் பண்ணக்கூடாத, கிஸ்ஸை மையமாக கொண்ட படம் நானும் ரெளடிதான்.
நயன்தாராவின் அழகை ஆராதிப்பதா நடிப்பை ரசிப்பதா என்ற மனதுக்குள் பட்டிமன்றம் நடந்து முடிய முதல் படம் முடிஞ்சிட்டுது. அரங்கு நிறைந்த காட்சியில் அழகான வசனங்களிற்கு சனம் வாய்விட்டு சிரிச்சது, இந்த படம் பிச்சுக்கொண்டு ஓடப்போவதை கட்டியம் கூறியது. பெண்கள் மீசையில்லாத வி.சேதுபதியை ரசிக்க ஆண்கள் நயன்தாராவை ஜொள்ளு விட்ட சமரசம் உலாவும் இடம், நானும் ரெளடிதான்.

நயன்தாராவை முத்தமிட போன வி.சேதுபதியை மடக்கி, நெருக்கம் விலக்காமால் நயன் பேசிய வசனம்... ப்பா...கிளாசிக். ஒரு பாடல் காட்சியில் கட்டுமரத்தில் நயன்தாரா ஏறி நிற்க வி.சேதுபதி ஆற்றில் இழுத்து கொண்டு போவார்... ரொமான்ஸ் பாஸ் ரொமான்ஸ்.. உச்சகட்ட ரொமான்ஸ். ஒவ்வொரு முறையும் வி.சேதுபதி "ஆர் யு ஓகே பேபி" என்று நயன்தாராவை பார்த்து கேட்பதும் அதற்கு நயன் கொடுக்கும் reactionம்... Priceless.
நயன்தாரா அடிக்க தேடிய அந்த ரெட் டீஷேர்ட் காரன் , ராதிகாவின் "கொத்தமல்லி கொழுந்து", வி.சேதுபதியின் கண்கள், பார்த்…

IPKFன் தீபாவளி

Image
1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது.

48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை புலிகளின் பலத்த எதிர்ப்பை முகம்கொள்கிறது. பல்கலைகழகம், கோட்டை, கோண்டாவில் என்று பல முனைகளில் பலமான இழப்பை இந்திய இராணுவம் சந்திக்கிறது. பலாலி, நாவற்குழி, யாழ் கோட்டை முனைகளில் இந்திய இராணுவம் உலங்குவானூர்திகளின் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சிக்கிறார்கள், கடும் சண்டையில் யாழ் மண் அதிர்கிறது. பல்கலைகழக வளாகத்தில் உலங்குவானூர்திகளில் வந்…

Cricketஉம் நானும்

Image
ஜந்து வயதில் அப்பா வாங்கித்தந்தார் Bat.நினைவறிந்தவரை, அன்று தான்"விசர்" கருத்தரித்தது.

Shot wavesல் ABC, BBC தேடிசாமத்திலும் commentary கேட்டுDaily Newsல் கடைசி பக்கம் முதலில் வாசித்துSports Star ஓடி வாங்கிநாளொரு வண்ணம் "விசர்" வளர்ந்தது

St. John'sல், schoolதொடங்க முதல் விளையாடிமுடிஞ்சா பிறகும் விளையாடிIntervalல் விளையாடிBook cricketஉம் விளாயாடிபொழுதொரு வண்ணம்  "விசர்" பெருத்தது. 

ஆறு மணியடித்ததும் நண்பர்களின்ஏச்சுக்கும் நக்கலிற்கும் மத்தியில் Match இடைநடுவில், வீடு திரும்ப வேண்டிய கட்டுப்பாடு,இல்லாட்டி "வீடு" groundsற்கு வரும்.

வார இறுதியில், match விளையாடவீட்டு வேலை செய்து, தேற்றம் நிறுவிகிழமைக்கொரு ஆட்டம் என்ற quota என தியாக வேள்வியானது "விசர்"

விடுமுறை நாட்களில்காலை மாலை எனஊர் ஊராய் போய் விளாயாடின matchகள்"வீடு" அறியாது. 

பாடசாலை அணியில் இடம் கிடைக்காத விரக்தியும் O/L, A/L, CIMA படிப்பு என்று வந்ததும்"விசர்" அடங்கி போனது என்னவோ உண்மை தான்.

வேலை கிடைத்து settle ஆனதும் "விசர்" மீண்டும் மரமேறியது.நிஜ honeymo…

ஜெனிவா... இனிவரும் காலங்கள்

Image
50 ஆண்டுகளிற்கு முன்பு Thirtieth of September (G30S அல்லது Gestok) என்ற கம்யூனிச சார்பு இயக்கம் இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆட்சிகவிழ்ப்பு சதி முயற்சி முறியடிக்கப்படுகிறது. அடுத்து வரும் மாதங்களில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசால் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஜெனிவாவை அண்டாத இந்த அநியாயத்தில் அமெரிக்காவின் பங்குமிருப்பதாக இன்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


வண பிதா இம்மானுவேல் ஜெனிவாவின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டது போல், 80களில் தமிழர் தரப்பை சந்திக்க மறுத்த ஜநா, இன்று தமிழர்களிற்கு நடந்த அநியாயங்களை பட்டியிலிட்டு ஒரு நீண்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அத்தோடு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண பரிந்துரைகளையும் வழங்கியிருக்கிறது. அளப்பரிய விலைகள் கொடுத்து பயணிக்கும் எமது விடுதலை போராட்டத்தில் இதுவொரு முக்கியமான வரலாற்று நிகழ்வு.

ஜநா அறிக்கையை தொடர்ந்த அமெரிக்க பிரகடனத்தின் பிரகாரம், இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒரு தரப்பினரிடம் ஒப்படைத்திருப்பது எவ்வாறு நியாயப்படு…

பரி யோவான் பொழுதுகள்

Image
1979ல் Cemetryக்கு அந்த பக்கமிருக்கும் Primary school gateக்கால நுழைந்து 1990ல் Cemetryக்கு இந்த பக்கமிருக்கும் Main gateக்கால வெளிக்கிட மட்டும், பரி யோவானில் கழித்த பொழுதுகள் இனிமையானவை, பசுமையானவை. பரி யோவானின் பரந்த வளாகத்திற்குள் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையை செதுக்கிய உன்னத சிற்பிகள், அதனுள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வாழ வழிகாட்டிய வாழ்க்கைப் பாடங்கள். 

அந்த காலத்தில் பரி யோவானின் Primary school மிகவும் குளிர்ச்சியானது...அங்கு இருக்கும் பெரிய மரங்களால் மட்டுமல்ல, அங்கு கற்பிக்கும் இளம் ஆசிரியைகளாலும் தான். சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் AL முடிக்கும் மாணவிகள் அடுத்த வருடம் பரி யோவானில் அழகிய பாலர் வகுப்பு ஆசிரியைகளாக அவதாரம் எடுப்பார்கள். Primary school Head Masterக்கு "அந்தப்புரத்து காவலன்" என்ற பட்டம் வழங்கி, சிரேஷ்ட மாணவ தலைவர்கள் கெளரவிப்பார்கள். 

LKGல் Louise Miss, 1ம் வகுப்பில் John Miss, 2ம் வகுப்பில் Sivaguru Miss என்ற மென்வலுக்களை கடந்து 3ம் வகுப்பில காலடி எடுத்து வைக்க.. வன்வலு காத்திருந்தது. 

3ம் வகுப்பில் Joshua master, class teacher. அடி பின…