Posts

Showing posts from November, 2015

மன்னிப்பாயா மாவீரா ?

Image
"நேசம் உறவுருவதால் வருவதில்லை, நினைவுறுவதால் வருவது" - நஞ்சுண்ட காடு நாவலில் கவியழகன்.
1989ம் ஆண்டு தமிழர் தாயக பிரதேசம் இந்திய இராணுவத்தினதும் ஒட்டு குழுக்களினதும் முழுமையான கட்டுபாட்டில் இருக்கிறது. அதே ஆண்டின் நடுப்பகுதியில் பிரேமதாச அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளிற்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி, இந்திய இராணுவம் வெளியேறுவதற்கான காலக்கெடு 31 மார்ச் 1990 என்று நிர்ணயிக்கப்படுகின்றது. காலக்கெடு விதிக்கப்பட்டதும் இந்திய இராணுவம் தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து மெல்ல மெல்ல வெளியேற ஆரம்பிக்கிறது. 

இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்களில் விடுதலை புலிகள் பகிரங்கமாக நடமாட தொடங்குகிறார்கள். நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தங்கள் முதல் வித்தான லெப். சங்கர் வீரமரணமடைந்த நாளான 27 நவம்பரை மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். அதுவரையில் இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுடனான மோதல்களில் வீரமரணமடைந்த 1,307 போராளிகளை நினைவுகூரந்து தமிழர் விடுதலை வரலாற்றில்  முதலாவது மாவீரர் நாள் 1989ம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதுவரை மண்டையன் குழுவின் அடாவடித…

நனவான கனவு.. almost

Image
"கனவு காண்பது மனதின் இயற்கை. கனவை உடைப்பது விதியின் இயற்கை" கடல்புறாவில் சாண்டில்யன்  

சில மாதங்களிற்கு முன்னர் எழுதிய "கனவான கனவு" பதிவில் கிரிக்கட் ஆட்டம் சம்பந்தப்ட்ட நான் 1987ல் கண்ட ஒரு கனவை பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த கனவு almost நனவான கதை...இனி

நவம்பர் மாதம் முற்பகுதியில் பரி யோவானின் மெல்பேர்ண் v சிட்னி பழைய மாணவர்களிற்கிடையிலான வருடாந்த கிரிக்கட் ஆட்டத்திற்கு நண்பன் Angelஓட பயணித்தேன். மெல்பேர்ண் விமானநிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள T4ல் checkin பண்ணிட்டு உடனடியாக FBல் checkin பதிவு செய்தேன். கவிதை போன்ற வரிகளுடன் போர் முழக்கம் வேற..
புலியாக (வெறியோடு)புலியில் (Tiger Air)புலியோடு (Angel)(காகித) புலி
சிட்னி நாளைக்கு நீங்க சட்னி !
வழமைக்கு மாறாக Tiger Air நேரத்திற்கு புறப்பட்டு நேரத்திற்கு தரையிறங்க,  சிட்னி விமானநிலையத்தில் எங்களுக்கு முதலாவது சோதனை காத்திருந்தது. மெல்பேர்ணிலிருந்து வந்த விமானத்திலிருந்த எல்லா luggageஜயும் காணோமாம். கிணற்றை காணோம் என்ற வடிவேலுவின்  கதையை ஞாபகப்படுத்தினார்கள் Tiger Air நிறுவத்தினர். WhatsAppல் கனடா பொடியள் இது சிட்னி O…

CIMA காலங்கள்.. ஒரு Prelude

Image
1992 August மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மத்தியான நேரம், A/L கடைசி சோதனை, அளவையியலும் விஞ்ஞானமுறையும் (Logic) பகுதி 2. Maths, Bio காரருக்கு சோதனை முடிஞ்சுது, Commerce காரருக்கு தான் இழுத்தடிச்சு போட்டாங்கள். போன இரு வருடங்கள் logic வினாத்தாள்கள் கடுமையாக இருந்ததில் கனபேருக்கு aggregate உதைச்சுது.

St.Peters பஸ் ஹோல்டிலிறங்கி வெள்ளை நிற பாடசாலை சீருடையில், வாழ்வில் கடைசி முறையாக, மத்தியான வெய்யில் சுட்டெரிக்க Lawrence ரோட்டில் நடக்க இதயம் கனத்தது. பாடசாலை பொழுதுகளின் பசுமையான நினைவுகள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் மனத்திரையில் தோன்றி மறைந்தது. அந்த பகுதிகளில் தரிசித்திருந்த முகங்கள் நினைவலைகளை மீண்டுமொரு உலாவந்தன.

கொழும்பு இந்து கல்லூரிக்குள் நுழைந்தால் ராமா, ராஜு, பண்டா, எலி முரளி,சதா என்று ஒரு குறூப் நின்று எல்லோரிடமும் காசு பறிக்குது. கொழும்பு இந்து கல்லூரி சம்பிரதாயப்படி கடைசி பரீட்சை முடிய முட்டை அடிக்கோணுமாம். ஒரு பச்சை நிற பத்து ரூபா தாளை கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டு, பிள்ளையாருக்கு ஒரு அரோகரா வைத்து விட்டு,  பரீட்சை மண்டபத்திற்குள் நுழைகிறோம்.

Paper நினைத்த அளவி…

1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:

Image
யாழ் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான Big Matchகள் பரி யோவானில் படித்த காலத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள். 1985 முதல் 1989 வரையான காலப்பகுதிகளில் Big Match, கோட்டை பிரச்சினையால் இடம்பெறாமல் விட்டது. இதுவும் எங்கள் பாடசாலை வாழ்க்கையில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வுகளில் ஒன்று.

1980களில் இடம்பெற்ற இரு ஆட்டங்களை அந்த ஆட்டங்களை கண்டுகளித்த யாரும் மறக்க மாட்டார்கள். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்ட பரி யோவான் அணி, True Johnian Spiritஐ வெளிப்படுத்தின தருணங்கள் அவை. காலங்கள் கடந்தும் நினைவலைகளை விட்டகலாத போட்டிகள் இவை.

1983ல் மகிந்தா (ராஜபக்ஷவிற்கு சொந்தக்காரனில்லை) தலைமையில்  பல புதிய முகங்களை உள்ளடக்கிய பரி யோவான் அணி களமிறங்கியது. கடந்த ஆண்டில் தவறவிட்ட வெற்றிக்கனியை தட்டிபறிக்கும் வெறியோடு மிகப்பலமான மத்திய கல்லூரி அணி போல் பிரகலாதன் தலைமையில் போட்டியில் குதித்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய பரி யோவான் அணி, மத்திய கல்லூரியின் அபார பந்து வீச்சில் தடுமாற தொடங்கியது. 19 ஓட்டங்களிற்கு 3வது விக்கட்டை இழக்க, களமிறங்குகிறார் Captain Mahinda. "Centralஆல ஏலாது, ஏலு…