Posts

Showing posts from December, 2015

வாறாயோ 2016ஏ வாறாயோ

Image
ஒவ்வொரு வருடமும் கடக்கும் போதும் கடந்து போகும் வருடத்தின் நிகழ்வுகள் மனத்திரையில் உலாவர இரு வேறு உணர்வுகள் எம்மை ஆட்கொள்ளும். அந்த வருடத்தில் இனிமையான பொழுதுகளை நினைக்கையில் நம்மையறியாமல் புன்சிரிப்பு அரும்பும். அந்த ஆண்டின் துன்பியல் நிகழ்வுகளை, குறிப்பாக நம்மை விட்டு பிரிந்தவர்களை, நினைக்கையில் பெருமூச்சொன்று வெளிகிளம்பும். 

ஈழத்தமிழர்களிற்கு கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தந்த வலியுடனும் அடுத்த ஆண்டில் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் தான் கடக்கும். 2015 செப்டெம்பரில் ஜநா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட போர் குற்ற விசாரணை ஆவணம், எம்மினத்தின் மீது காலங்காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்த சர்வதேச ஆவணம். எனினும் போர் குற்றங்களை உள்ளக பொறிமுறையில் விசாரிக்க சர்வதேசம் இணங்கியது தமிழினம் சந்தித்த இன்னொரு மாபெரும் ஏமாற்றம்.

இன்னும் 20 வருடங்களிற்கு இலங்கையை ஆட்சி செய்து, அந்த தீவில் தமிழர்களின் அடையாளத்தை துடைத்து எறிந்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவிற்கு வந்ததுடன் 2015 ஆரம்பமாகியது. மஹிந்வை அகற்றிய "மாற்றத்…

CIMA: சோதனையான சோதனை

Image
நான்கு stages அல்லது கட்டங்களை கொண்ட CIMA பாடநெறியில் இரண்டு கண்டங்கள் இருந்தது. Stage 2ல் முதலாவது கண்டம், அதை ஒரு மாதிரி தாண்டி வந்தால், Stage 4 என்ற மாபெரும் கண்டம் காத்திருக்கும். அதையும் தாண்டிட்டா வாழ்க்கை இறக்கை கட்டி பறக்குதடா அண்ணாமலை சைக்கிள் (கரியரில் குஷ்பூவோடு) மாதிரியாகிடும்.

CIMA சோதனைகள் மே மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் நடக்கும். 1993 நவம்பரில் புலிகளின் ஒபரேஷன் தவளையில் பூநகரி முகாம் சிக்க, கொழும்பு காலி வீதியில் அம்புலன்ஸ் வண்டிகள் ஊர்வலம் போகும். செக் போயின்டுகளில் நிற்கிற பொலிஸ்காரனும் ஆமிக்காரனும் கடுப்பில நிற்பாங்கள், எப்ப உள்ளே தூக்கி போடுவாங்களோ தெரியாது என்ற டென்ஷனோடு பரீட்சை எழுதிய காலங்கள் அவை. 

1994 இறுதியில், நாங்கள் முதல் மூன்று கட்டங்களையும் தாண்டி நாலாவது stageஐ எட்ட சந்திரிக்கா அம்மையார் ஆட்சிகட்டிலேறி புலிகளோடு யுத்த நிறுத்தம் செய்யவும் சரியாயிருந்தது. கொஞ்சம் நிம்மதியாக பயமில்லாமல் போய் வந்து படிப்பில் கவனம் செலுத்த கிடைத்த காலகட்டம். 

ஒவ்வொரு கட்டத்திலும் நான்கு பாடங்கள். Stage 4ல் MDM என்ற ஒரு பாடம் மிகக் கடுமையானது. Calculus, Algebra அது இது என…

தேத்தண்ணி

Image


நாம் வளரும் நம்மோடு காலங்களில் ஒட்டிக்கொள்ளும் சில விஷயங்கள் காலங்கள் கடக்கும் போதும் சலிக்காமல் அலுக்காமல் எம்மோடு பயணிக்கும், தேத்தண்ணியும் அப்படித்தான். இன்னொரு விதமாக சொன்னால், தேத்தண்ணியின் சுவையும் நயன்தாராவின் அழகு மாதிரி..ரசிக்க ருசிக்க, ருசிக்க ரசிக்க மெருகேறிக்கொண்டேயிருக்கும், திகட்டவே திகட்டாது. 

வெள்ளைக்காரன் சிலோனிற்கு வந்து கண்டெடுத்த கறுப்பு தங்கம் இந்த தேத்தண்ணி. இறுதி யுத்தம் உச்சக்கட்டத்திலிருக்கும் போது Ceylon Teaயை புறக்கணிப்போம் என்ற கோஷம் எழுந்த போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்த தவிப்பு தமிழ் கூறும் நல்லுலகம் அறியாதது. என்னைடைய அலுவலகத்தில் வேலை செய்யிற சைனாக்காரி எப்ப சீனா போகும் போதும் எனக்கு Premium China black tea பக்கற்றுகள் கொண்டுவருவாள். சும்மா முகஸ்துதிக்கு "it's wonderful" என்று சொல்லுவன், கருமம் அதை மனுசன் குடிப்பானா. 

படிக்கிற காலங்களில் அம்மா தேத்தண்ணி போட்டு கட்டிலிற்கு கொண்டுவந்து, "எழும்பி படிடா, காலம்பற படித்தா தான் மண்டைக்குள்ள நிற்கும்" என்று சுப்ரபாதம் பாடுவா. Laxspray போட்ட பால் தேத்தண்ணியில் இர…

மொக்கு கொமர்ஸ்காரன்

Image
1989 டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய எங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை நாட்டில் நிலவிய வன்முறை சூழ்நிலையால் 1990 மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. தெற்கில் ஜேவிபி பயங்கரவாதம் தலைவிரித்தாட வட கிழக்கில் ஈபிகாரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பும் படுகொலைகளும் தாண்டவமாடிய காலகட்டம்.
பரி யோவானில் withdrawals பரீட்சை 1990 பெப்ரவரி மாத கடைசியில் நடந்து, உயர் தரத்தில் கற்க விரும்பிய பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. எனக்கு commerce செய்ய தான் விருப்பம். வீட்டில அம்மா நான் என்ஜியனராகோணும், மொக்கங்கள் தான் commerce செய்வாங்கள் என்று தினம் தினம் கந்தசஷ்டி பாட, நானும் Maths படிக்க விண்ணப்பித்தேன். 
யாழ்ப்பணாத்தில் படித்தா ஒன்று டாக்குத்தராகோணும் என்ஜினியராகோணும் இல்லாட்டி அப்புகாத்தாகோணும், அப்பதான் சமுதாயம் மதிக்கும் என்ற காலங்காலமாக நிலவிய யாழ்ப்பாண சமுதாய எண்ணதின் பிரதிபலிப்பை என்னுடைய அம்மாவிலும் கண்டேன். O/L திறமா செய்யாதவன் தான் commerce படிப்பான், கம்பஸ் போகாதவன் தான் CIMA செய்து கணக்காளராவான் என்பது யாழ்ப்பாண சமுதாயம் வகுத்த நியதிகள். 

1990 மே மாதம் இரண்டாம் தவணை தொடங்க, வாழ்வில் முதல் தடவையாக…