Posts

Showing posts from January, 2016

வருவது காதல்....

Image
உயர்தரம் படிக்க தொடங்க பெடியளிற்குள் ஒரு மாற்றம் வரும். அரும்பு மீசை துளிர்விட காதல் அரும்பும் மனதிற்குள் துளிர்விடும். அந்த வயதில் எல்லா பெடியளும் யாரோ ஒரு பெட்டையை கட்டாயம் மனதிற்குள் காதலித்திருப்பார்கள். 

சிலர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த உணர்வை மனதிற்குள் வைத்து பூட்டி சாகடிப்பார்கள். வேறு சிலர் அந்த பெட்டைக்கு காதலை தெரிய வைக்க சுழற்ற தொடங்குவார்கள். சுழற்ற தொடங்கும் சிலர் காதலை பெட்டையிடம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவார்கள். காதலை அறிவித்தவர்களில் அரிதாய் ஓரிருவருக்கு பச்சை சிக்னலும் சிலரிற்கு சிவப்பு சிக்னலும் காட்டப்பட, பலரிற்கு மஞ்சள் சிக்னல் தான் வரமாய் கிடைக்கும்.

ஒரு பெட்டையை மனதிற்குள் காதலிக்கும் உணர்வு அற்புதமானது.  ஜம்புலன்களிற்கும் விடுமுறை அறிவித்து விட்டு மனதை இளக்கி மேகத்தில் நீச்சலடிப்பது போன்ற ஒரு உணர்வு. திரைப்படங்களில் வரும் அபரிதமான வர்ணணைகள் சிலநேரங்களில் அந்த பரிசுத்தமான உணர்வை கொச்சைபடுத்தும்.  அதேவேளை சில திரையிசை பாடல்கள் பெடியளின் காதல் உணர்வை அப்படியே தத்ரூபமாக பதிவுசெய்வது மட்டுமன்றி அரும்பும் காதலெனும் செடியை தண்ணீரூற்றி செழிப்பாக்கும…

ஒரு படம், ஒரு புத்தகம், ஒரு Match

Image
சனிக்கிழமையிரவு பாலாவின் தாரை தப்பட்டை படம்  இரவு 9.30 காட்சி பார்க்க தியேட்டருக்கு போய் இறங்க 9.36 ஆகிவிட்டது. எனக்கு எழுத்தோட்டத்திலிருந்து படம் பார்க்க வேண்டும். காரால் இறங்கினதும் தனக்கு ஓரு " skinny latte" வேண்டும் என்று மனிசி அடம்பிடிக்க, வந்த டென்ஷனிற்கு கதம் கதம் சொன்னேன். வெள்ளக்காரி கதை அலம்பி முடிச்சு கோப்பி போட்டு தந்து, டிக்கட் கிழித்து, சரியான தியேட்டர் தேடி, இருட்டில் சீட் கண்டுபிடித்து போய் அமர....சசிகுமார் குரல் "புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்" என்று ஒலிக்குது.  ...........................................................................................................................................................
ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் ஓஸ்ரேலிய இந்திய அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டி MCGயில் அரங்கேறியது. அன்றைக்கென்று பார்த்து ஒரு family lunch, அது சுணங்க.. மீண்டும் டென்ஷன், கதம் கதம்.  அடிச்சு பிடிச்சு காரை எடுத்து கொண்டு பறந்து மைதானத்திற்குள் நுழைந்தால் கோஹ்லியும் தவானும் களத்தில் நிற்கிறாங்கள், ஷர்மா அவுட். MCGயிலும் தார…

விஜயபாலவின் Chit.....CIMA காலங்கள்

Image
நாங்கள் CIMA படிக்கிற காலங்களில் ஒரு சில லண்டன்காரன்கள் எங்களுடன் படித்தார்கள். இவயள் லண்டனில் CIMA படித்து கொண்டிருக்கீனமாம், vacationல் இலங்கைக்கு வந்து நிற்கீனமாம்,  விடுமுறையிலும் தவம் போல் CIMA படிக்க ஆர்வத்தில் வகுப்பிற்கு வருகீனமாம் என்று கதை விடுவார்கள். ஆனால் இவர்களின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பது காலம் போக போகத்தான் தெரியவரும். 

தமிழ் மொழியில் பாடசாலை கல்வியை முடித்துவிட்டு வாழ்வில் முதல்முறையாக ஆங்கில மூலத்தில் படிக்க தொடங்கிய எங்களிற்கு இந்த லண்டன்காரன்கள் accent போட்டு சரளமாக ஆங்கிலம் கதைக்கிறதும் எழுதிறதும் கடுப்பாக்கும். கொழும்பில் படித்த சில தமிழ் பெட்டைகள் வேற இவங்களோடு ஆங்கிலத்தில் கதைக்கும் போது எங்கள் வயிறு பற்றி எரியும். மொத்ததில் இவங்கள் தமிழ் படத்தில் வாற அமெரிக்க மாப்பிள்ளைகள் மாதிரி என்று சொல்லலாம். 

CIMA வகுப்புகளில் ஏதாவது சந்தேகம் வந்தால் பள்ளிக்கூடத்தில் கேட்ட மாதிரி கை உயர்த்தி கேட்க முடியாது. ஒன்று கேள்வி கேட்கிற அளவிற்கு ஆங்கிலம் தெரிய வேண்டும். இரண்டு, இருநூறு முந்நூறு பேர் இருக்கிற வகுப்பறையில் சத்தமாக…

ஜீவானந்தம் மாஸ்டர்........பரி யோவான் பொழுதுகள்:

Image
1999ம் ஆண்டு, யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தின் கிடுங்கு பிடிக்குள் சிக்கியிருந்த காலம். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அளித்த சாட்சியத்தில், செம்மணியில் மனித புதைகுழி இருப்பது உலகின் கவனத்திற்கு வருகிறது. இன்றுபோல் அன்றும் இலங்கை அரசு சர்வதேச கண்காணிப்புடன் உள்ளக விசாரணை எனும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது. உள்ளக விசாரணையை நெறிப்படுத்த  பரி யோவான் பழைய மாணவன் நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்படுகிறார். 

பவள் கவசவாகனங்கள், ஆர்மி ட்ரக்குகள், பொலிஸ் ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ சைரன் பூட்டிய காரில் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் செம்மணி வீதியூடாக செம்மணிக்கு அழைத்துவரப்படுகிறார். செம்பாட்டு புழுதி கிளப்பிக்கொண்டு பறக்கும் வாகன அணியை வீதியோரத்தில் நின்ற சனம் பயம் கலந்த கண்களோடு வேடிக்கை பார்க்க, சைக்கிளில் பயணிப்போர் ஓரமாக இறங்கி மிரட்டும் வாகன அணியில் சிக்காமல் தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள்.

வாகன அணி அரியாலையை அண்மித்தபோது நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவிற்கமைய வாகன அணி சடுதியாக நடுவீ…