Posts

Showing posts from February, 2016

ஆதிரை

Image
"ஆதிரை" என்ற இலக்கிய செழுமை நிறைந்த ஒரு தரமான நாவலை விமர்சிக்கும் தகைமை எனக்கில்லை. எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து விலாசம் காட்டி கொண்டிருப்பதை கண்முன் கொண்டு வந்த மனசாட்சியின் மறுவுருவத்தை, வாசித்த ஒரு சாதாரண வாசகனாக எனது வாசிப்பனுவத்தை பகிருவதே, இந்த பதிவின் நோக்கமாக அமைகிறது. 

""எதிரிகளை மன்னித்து விடலாம். துரோகிகளை மன்னிக்கவே முடியாது" என்று பற்களை நறுமியபடி சிங்களத்தில் சொல்வதை முதற் தடவையாக கேட்டபடி அவளை கடந்து இழுத்து செல்லப்பட்டேன்"

1991ல் கைதாகி சித்திரவதைக்குள்ளாகும் லெட்சுமணனின் அவஸ்தையில் ஆரம்பிக்கும் நாவல், 2008 ஆண்டின் கடைசி நாளில் முகமாலை காவலரணில், ஜோன் தமிழரசி என்ற ஆதிரை குப்பியடித்து வீரமரணமடையும் பதினாலாவது அத்தியாத்திற்கிடையில் மூன்று தசாப்த விடுதலை போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை மண்ணின் மணம் மாறாமல் பதிவு செய்கிறது, சயந்தனின் "ஆதிரை" நாவல்.

"தீர்வுகளை சொல்லாமல் வெறுமனே…

Michael

Image
வாழ்வு எனும் ரயில் பயணத்தில் பலர் வந்து போவார்கள், அதில் சிலர் எம்மோடு தொடர்ந்தும் பயணிப்பார்கள். வேறு சிலர் இடையில் ஏறி இறங்குவார்கள், ஆனாலும் அவர்களின் நினைவுகள் மட்டும் தொடர்ந்து எம்மோடு பயணிக்கும். 

Michael நவரட்ணராஜா..பரி யோவான் கல்லூரி 1990 உயர்தர பிரிவின் நட்சத்திரங்களில் ஒருவர், Prefect, Leo Club தலைவர், Handy House Captain, பரி யோவானின் London பழைய மாணவர் சங்க தலைவர் என்று  இப்படி கல்லூரி வாழ்க்கையிலும் அதற்கு பின்னரும் மின்னிய நட்சத்திரம் மறைந்து விட்டது என்ற செய்தி அவரது குடும்பத்தையும் பரி யோவான் சமுகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
_________________________________________________________________________________


1990 Big Match பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்ததும், அந்த கிரிக்கட் அணிக்கு தலைமை தாங்கிய சதீசனுடன் கதைத்தேன். 

"ஜசே, matchற்கு முதல் நடந்த அட்டாகசம் எல்லாம் எனக்கு தெரியாது. Michael தான் உதுக்கெல்லாம் லீடர், Michaelஐ கேளும் நிறைய கதை சொல்லுவார்" என்று சதீசன் நழுவினார். 

FB messengerல்  Michaelஐ தொடர்பெடுத்தேன். இரண்டுமுறை தொடர்பு கொண்டும் …

1990 Big Match.......பரி யோவான் பொழுதுகள் :

Image
மார்ச் மாதம், 1990
அமைதி காக்கவென இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய இராணுவத்தினதும் அதன் அராஜக ஒட்டு குழுக்களினதும் கொடூர பிடியிலிருந்து மீண்டு, யாழ்ப்பணம்  நிம்மதியாக மூச்சு விட்டு கொண்டிருந்தத காலம். விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுபாட்டில் யாழ்ப்பாணம் மீண்டுமொரு யுத்தங்களிற்கிடையிலான தற்காலிக இயல்பு வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருந்த காலப்பகுதி. விடுதலை புலிகளிற்கும் பிரேமதாச அரசிற்குமிடையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று கொண்டிருந்த காலங்கள்.

பிள்ளைபிடி (ஈபி)காரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பால் தடைபட்டிருந்த பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியிருந்தது. 1984ம் ஆண்டிற்கு பின்னர் நடைபெறாத, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ் பரி யோவான் கல்லூரிக்கும் இடையிலான "வடக்கின் பெரும் போர்" (Battle of the North) கிரிக்கட் ஆட்டத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. "வடக்கின் பெரும் போர்" இடம்பெறும் மத்திய கல்லூரி மைதானம், யாழ் கோட்டையை அண்டிய இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்ததால், 1984ம் ஆண்டிற்கு பின்னர் இந்த போட்டி இடம்பெற…

CIMA காலங்கள்: அந்த முதல் நாள்

Image
பெப்ரவரி 6, 1995, திங்கட்கிழமை
ஓஸ்ரேலியாவிலிருந்து மாமா கொண்டுவந்து தந்த வெள்ளைநிற கோடு போட்ட இளநீல முழுக்கை சேர்ட், ஹமீடியாஸில் அளவெடுத்து தைத்த trouser, அன்று காலை மீண்டும் துடைத்த புத்தம்புது Bata சப்பாத்து அணிந்து வாழ்வில் முதல்முறையாக வேலைக்கு புறப்படுகிறேன். அம்மம்மாவிடம் ஆசி வாங்கி, வத்தளை அல்விஸ் டவுண் வீதியில் இருக்கும் பரிச்சயமான குழிகளையும் பரபரப்பான நீர்கொழும்பு வீதியையும் கடந்து பஸ் நிலையத்தை அடைகிறேன்.

"பாலியகொட, பஞ்சிகாவத்த, கொட்டுவா...கொட்டுவா..கொட்டுவா" என்று முழங்கும் 187 மினிபஸ்ஸில் ஏறி, சேர்ட் கசங்காமல் இருக்க தலையை குனிந்து ஓட்டுனர் பக்கமிருக்கும் சிறிய பகுதிக்குள் என்னுடலை குறுக்கி கொள்கிறேன். ஜா-எல 187 Rosa மினிபஸ்கள் அநேகமானவை புதியவை, முக்கிய தரிப்பிடங்களில் மட்டுமே நிறுத்துவதாலும் வேகமாக பயணிப்பதாலும் கொழும்பு கோட்டையை விரைவாக அடைந்து விடும். கொழும்பு கோட்டை புகையிரதம் நிலையத்திற்கு முன்பாக மினிபஸ்ஸால் இறங்கி நிமிர்ந்து புகையிரத நிலையத்தை பார்க்கிறேன். ஐந்தாண்டுகளிற்கு முன் அதே புகையிரத நிலையத்தில் அம்மாவோடு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து ரயில…