Posts

Showing posts from March, 2016

அனுபவித்ததிலிருந்து 2....2016 Big Match

Image
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில், 110வது வடக்கின் பெரும் போரிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2014லும் 2015லும் பரி யோவான் அணியின் கை ஓங்கியிருந்த வேளையில் மைதானத்திற்குள் புகுந்த குழப்பவாதிகளால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அவ்வாறான சம்பவம் இம்முறையும் இடம்பெறுவதை தடுக்க, குழப்பவாதிகளை கட்டுப்படுத்தவென யாழ்ப்பாண நீதிவான் இளஞ்செழியனின் உத்தரவிற்கமைய பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். 

பரி யோவானில் படிக்கும் காலங்களில் மாணவர்கள் மைதானத்திற்குள் இறங்குவது கல்லூரி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. மாணவர்களை மைதானத்திற்குள் இறங்கவிடாமல் பரி யோவானின் காவல்துறை, இயக்கம் முகமாலை எல்லையை காப்பதுபோல், மைதானத்தின் எல்லை கோட்டை காவல் காக்கும். விக்கெட்டுகள் விழும் போதும், துடுப்பாட்டகாரர்கள் ஜம்பது, நூறு அடிக்கும் போதும் பழைய மாணவர்கள் கொடிகளோடு மைதானத்திற்குள் இறங்குவதை நாங்கள் பொறாமையோடு பார்ப்போம். 

1990ல் சுரேன் நூறடிக்க, முன்னாள் பரி யோவான் காவல்துறை அதிகாரியான சுதர்ஷன் அண்ணா மைதானத்துக்குள் ஓடி எங்களை வெறுப்பேத்தினார். மெல்பேர்ணில் வாழத்தொடங்கிய பிறகு …

அனுபவித்ததிலிருந்து.. 2016 Big Match

Image
மார்ச் 10, 2016.. வியாழக்கிழமை 
அத்தியடி பிள்ளையார் கோயிலின் காண்டாமணி சத்தம் கேட்டு  விழித்து எழும்ப, ஒரு வித பரபரப்பு பற்றிக் கொண்டது. மீண்டும் Big Match பார்க்க போகிறேன் என்ற நினைப்பு, கொட்டாவியை கலைத்து, சோம்பலை முறித்து, குளியலறைக்கு வீறுநடை போடவைத்தது. குளியலறைக்குள் நண்பன் அருள், கதவு மூடியிருக்க, ஃபோனில் டைப் பண்ணும் டிக் டிக் சத்தம் மட்டும் கேட்டது.

அருள், கணா, ஆதி, ரகு என்னோடு வீட்டில் தங்க லண்டனிலிருந்து வந்திருந்த சுரேன், இன்பன், சிறிபிரகாஷ், ஜெய், டோனி, அரவிந்தன் ஆகியோர் Jet Wingsலும் கஜன் தன்ட வீட்டிலும் சுது சிறி, அம்மான் ரோயோடும் டாக்டர் விஜயன் தன்னுடைய மாமி வீட்டிலும் தங்கியிருந்தார்கள். 

"டேய்.. மொழி.. அன்டிமாரோடு அலட்டிறதை நிற்பாட்டி போட்டு கெதியா குளிடா.."

ராணி சோப் போட்டு குளித்து முடித்து எங்கட batchற்கு என்று பிரத்தியேகமாக தைத்த big match tshirt அணிந்து, விறாந்தையிலுருந்து தேத்தண்ணி குடிக்கிறோம். யாழ்ப்பாண காலைகளிற்கு ஒரு தனித்துவமிருக்கும். காற்றில் ஒரு தெய்வீக மணம் கமழ காலை சூரியன் மண்ணை தழுவ தொடங்கும் கணங்கள் ரம்மியமானது.  தேத்தண்ணி குடித்து முடித்…

யாழ்ப்பாணத்தில்.....

Image
நாற்பது சொச்ச வருட வாழ்க்கையில் மிகக் குறைந்தளவு வருடங்களே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்தாலும், யாழ்ப்பாணத்தில் கொண்ட காதல், கொழும்பிலோ மெல்பேர்ணிலோ வரவில்லை. யாழ்ப்பாணத்தை நான் அன்றும் காதலித்தேன், இன்றும் காதலிக்கிறேன். யாழ்ப்பாணம் மட்டும் என் காதலை என்றும் ஏற்றதில்லை, ஆனாலும் ஒரு தலை காதலாக என் காதல் தொடர்கிறது. அவள் என் காதலை ஏற்க விடாப்பிடியாக மறுக்க மறுக்க, யாழ்ப்பாணத்தில் எனக்கிருக்கும் காதலும் வீறாப்பாய் தொடர்கிறது.


யாழ்ப்பாணம்..
என்றென்றும் என் காதலி
என்னை காதலிக்காத காதலி


டுபாயிலிருந்து கொழும்புக்கு விமானம் ஏற ஆயத்தமாக "யாழ்ப்பாணம் போகப் போகிறேன்" என்று மனம் உற்சாகமாக, கண்கள் பனித்தன. சென்னை தாண்டி, இலங்கைத் தீவிற்கு மேல் விமானம் பறக்க, ஒரு சிறுவனை போல் யன்னலில் முகம் புதைத்து யாழ்ப்பாணத்தை தேடுகிறேன். மறைத்த முகில் அகழ, நாங்கள் கோலோட்சிய  நீல நிற ஆழக்கடலில், யாழ்ப்பாணத்தை தேடுகிறேன். பார்வைக்குள் வர அவள் மறுக்கிறாள். விமானத்தின் வலப் பக்கத்தில் நான், விமானத்தின் இடப் பக்கத்தில் யாழ்ப்பாணம், தொடர்ந்தும் என்னை யாழ்ப்பாணம் தவிக்க வைத்தது.


யாழ்ப்பாணம்..
என்றென்றும் என…

1990 Big Match.......பரி யோவான் பொழுதுகள் :

Image
கடினமான சமூக பொருளாதார  நெருக்கடிகளை எதிர்தோக்கும் நாடுகள், அதிலிருந்து மீள அந்த தேசத்தின் விளையாட்டு அணிகள் ஈட்டும் வெற்றிகள் தேசத்தின் மீள் எழுச்சிக்கான அடித்தளமாக அமையும். 70களில் கரீபியன் தீவுகளில் Clive Lloydன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியும்  80களில் இங்கிலாந்தில் Ian Bothamன் கிரிக்கட் அணியும் தங்கள் தங்கள் தேசத்தின் மீளெழுச்சியில் பெரும்பங்காற்றின.

1985ல் அதிபர் ஆனந்தராஜாவை இழுந்ததுடன் ஆரம்பித்த பரி யோவான் கல்லூரியின் இருண்ட காலங்கள், 1980களின் இறுதி வருடங்களில் பரி யோவானை உலுப்பி எடுத்ததன. 1988 டிசம்பரில் யாழ்ப்பாண கச்சேரியடி கார் குண்டு வெடிப்பில் பலியான ஹரிசுதன், திருத்தணிகேசன், 1989ல் யாழ் தேவியில் ஈபிகாரன்களின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட கஜேந்திரன், மண்டையன் குழுவால் கொல்லப்பட்ட அகிலன் மற்றும் தேவகுமார், கடலில் மூழ்கி இறந்த ரஞ்சித், என சாவுகளும் இழப்புகளும் பரி யோவான் வளாகத்தை ஆக்கிரமித்த கொடிய வருடங்கள் அவை.

வாகீசன் (86,87) சஞ்சீவன் (88,89) தலைமை தாங்கிய பரி யோவானின் பலமான கிரிக்கட் அணிகளின் ஆட்டங்கள் யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்த…