Posts

Showing posts from April, 2016

2016 Big Match.. அனுபவித்ததிலிருந்து 6

Image
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 110வது கிரிக்கட் ஆட்டம் மார்ச் 10, 2016ல் ஆரம்பமாகியது. கொழும்பில் Battle of the Blues என வர்ணிக்கப்படும் Royal Thomian கிரிக்கட் ஆட்டம் ஆரம்பமான அதே நாளில் யாழில் Battle of the North ஆரம்பமாகியது. இரு ஆட்டங்களும் Paparae TVயில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
நாங்களும் ஏலும்...
முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 75 ஓவர்கள் ஆடி 161 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பரி யோவானின் பந்து வீச்சு அபாரமாக இருந்தாலும் களத்தடுப்பில் இருந்த பலவீனம் மத்திய கல்லூரியை 161 ஓட்டங்களை எட்ட வழிசமைத்தது. பரி யோவானின் ஜதுஷன் 39 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளையும் நிலோஷன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பரி யோவானின் ஆரம்பத்துடுப்பாட்டக்காரர்கள் நொட்டி விளையாட தொடங்க எங்களுக்கு கொட்டாவி வர தொடங்கியது. 14வது ஓவரில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதலாவது பரி யோவான் விக்கட் சரிந்தது. 27ல் இரண்டாவது விக்கெட்டும் 33வதில் மூன்றாவது விக்கெட்டும் சரிய வந்த கொட்டாவி பறந்து, ந…

யாழ்ப்பாண விருந்துகள்... அனுபவித்ததிலிருந்து 5

Image
தாயகத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் சிதறுண்டு உலகின் பல்வேறு நாடுகளிற்கும் புலம்பெயர்ந்த பாடசாலை நண்பர்கள் மீண்டும் ஒன்றுகூடி பம்பலடித்து நட்பை புதுப்புக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலங்களில் அரங்கேறி வருகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் ஒன்று கூடல் நிகழ்வுகள் முகநூலில் லைக்குகளை அள்ளி வாங்கும். நாங்கள் படித்த பரி. யோவானின் 92 batchம் கோலாலம்பூரில் 2013ல் ஒன்று கூடி, வாழ்வில் மறக்க முடியாத முத்தான மூன்று நாட்களை வாழ்ந்து மகிழ்ந்தோம்.

யாழ்ப்பாணத்தில் Big Match பார்க்க மீண்டும் ஒன்று கூடுவோம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதும் "யாழ்ப்பாணத்தில் போய் என்னத்தை செய்யுறது" என்று ஒரு கூட்டம் பின்னடிக்க "அங்க சனம் கஷ்டப்படுது, அதுக்க நாங்க போய் அட்டகாசம் செய்யுறது சரியில்லை" என்று இன்னொரு குறூப் உணர்ச்சிவசப்பட்டது.

உண்மைதான்.. பாங்கொக்கில் விளையாடுற விளையாட்டை கோலாலம்பூரில் ஆடமுடியாது, கோலாலம்பூரில் போடுற கூத்தை கொழும்பில் அரங்கேற்றேலாது, கொழும்பில் விடுற சேட்டையை யாழ்ப்பாணத்தில் விட முடியாது.
எங்கட யாழ்ப்பாணமடா.. 
----------------------------…

மீண்டும் பள்ளிக்கு.... அனுபவதித்ததிலிருந்து 4

Image
மீண்டும் பள்ளிக்கு போகலாம்  நம்மை நாம் அங்கு காணலாம்
"பள்ளிக்கூடம்" படத்தில் இடம்பிடித்த அந்த அருமையான பாடல் வரிகளை கேட்கவே உள்ளம் கூத்தாட தொடங்கும்.  துள்ளித்திரிந்த காலத்தில் ஓடித்திரிந்த பாடசாலை வளாகத்தை மீண்டும் தரிசிக்கும் போது ஏற்படும் உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது, அனுபவதித்து தான் உணரவேண்டும். அதே மீள்தரிசனம், பம்பலடித்து திரிந்த நண்பர்களுடன் என்று அமையும் போது விபரிக்க விளையும் சொற்களே பிடறியில் குதிக்கால் அடிக்க ஓடி ஒளியும். 

யாழ்ப்பாண வரவேற்பு வளைவில் நடுவீதியில் நின்று குறூப் படம் எடுக்க, ஏ9 வீதியில் சென்ற வாகனங்கள் சற்று நேரம் தரித்து நின்று எங்களுக்கு வழிவிட்டன. சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மினிவானின் ஓட்டுனர் கையசைத்து தனது மகிழ்வை வெளிப்படுத்தினார்.
"மச்சான், கணக்கர் சந்தியில் என்னை இறக்கி விடுங்கோ" லண்டன் ஜெய் நாவற்குழி பாலத்தடியில் கோரிக்கை வைக்க, கண்டி வீதியில் புங்கன்குளம் சந்தியை யார் கண்டுபிடிப்பது என்று எமக்குள் சிறு போட்டி. சுண்டுக்குளி மாணவி கிரிஷாந்தி உட்பட பலர் கொலை செய்து புதைக்கப்பட்ட செம்மணி வெளி தாண்டினோம். …

அனுபவித்ததிலிருந்து 3.. Big Match 2016

Image
இளநீர் குடித்துவிட்டு திரும்பிவர, ஒரு சின்ன ட்ரக்கில் பரி யோவான் மாணவர்கள் கொடிகளோடும் பீப்பிகளோடும் தாரை தப்பட்டைகளோடும் நிற்கிறாங்கள்.
என் இனமே என் சனமே
"தம்பி நாங்களும் வரட்டோ" பம்மினோம், ஆட்டத்திற்கு எங்களையும் சேர்ப்பாங்களோ என்ற சந்தேகம்.
"அண்ண.. என்ன விசர்க்கதை.. ஏறுங்கோ" .. தம்பிடா
"ஏத்தி விடுங்கோடா" முக்கி தக்கி ட்ரக்கில் ஏறினோம், இல்லை தம்பிமார் ஏற்றி விட்டார்கள்.

கஜன், உரும்பிராய் அரா, ஜெய், நகு என்கிற ரகு, கணாவோடு நானும் இளம் பொடியளோடு சேர்ந்து ஏற ட்ரக் நிறைந்து விட்டது. ஒரு மூச்சு பிடித்து இழுத்து ட்ரக் நகர தொடங்கியது. மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள யாழ் மணிக்கூட்டு கோபுரத்தையும் அதை சூழ அமைக்கப்பட்டுள்ள தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், சங்கிலியன் ஆகியோரது உருவச்சிலைகளையும் ஒரு முறை வலம் வந்து வேம்படி மகளிர் கல்லூரி நோக்கி ட்ரக் பயணிக்கிறது. வழியில் மத்திய கல்லூரி மாணவர்கள் பாசறையிலிருந்து கூய் சத்தங்கள் ட்ரக்கை குறிவைக்கின்றன. 

வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் சில நிமிடங்கள் தரித்து நின்று வாத்தியங்கள் முழங்க, ட்ரக்கிலிருந்தவாறே …