Posts

Showing posts from May, 2016

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்

Image
இரு வேறு நிலங்களை பற்றிய இரு புத்தகங்களை வாசித்தனுபவம் வித்தியாசமானது. முதலாவது புத்தகம், சிந்துவெளி என்று அறியப்பட்ட மெலூஹா என்ற, இன்றைய இந்தியா பற்றியது. உலகின் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய அற்புதமான சூர்யவம்சிகளின் சாம்ராஜ்ஜியம் பற்றியது அமிஷ் எழுதிய "மெலூஹாவின் அமரர்கள்".  அமிஷ் ஒரு வங்கியியலாளராக இருந்து எழுத்தாளராக மாறியவர், இது அவரின் முதல் புத்தகம். இராமபிரானிற்கு பிற்பட்ட காலத்தில் சூர்யவம்சிகளின் எதிரிகளான, சந்திரவம்சிகளிடமிருந்தும் அவர்களுடன் கைகோர்த்த அற்புத சக்திகள் படைத்த நாகர்களிடமிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கும் சூர்யவம்சிகளை காப்பாற்ற அவதாரம் எடுக்கும் சிவபெருமான் எனும் கற்பனை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது "மெலூஹாவின் அமரர்கள்" நாவலின் கதைக்களம்.
"தீமை தலைவிரித்தாடும் போது, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள், இனி போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும் போது ஒரு வீரன் வருவான்"

அவ்வாறான ஒரு காவிய புருஷன் நிஜமாகவே நம்மத்தியில் பிறந்து வாழ்ந்த எமது தாயக நிலம் பற்றியது பிரான்ஸிஸ் அமல்ராஜின் &quo…

குஷ்பூ... வருஷம் 16லிருந்து

Image
1990, ஏப்ரல் மாதம்
சனாதிபதி பிரேமதாச விதித்த காலக்கெடுவிற்கமைய, இலங்கை மண்ணை விட்டு கடைசி இந்திய இராணுவ ஜவான் 31 மார்ச் 1990ல் வெளியேற, தமிழர் தாயக பகுதிகள் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரலாற்றில் முதல்தடவையாக வந்தன. 1990 மார்ச் மாதம் Big Match வென்ற உற்சாகத்தோடு, O/L சோதனை எழுதி முடித்துவிட்டு, அரைக்காற்சட்டைக்கு விடை கொடுத்து, முழு நீள காற்சட்டைக்கும் Baggy Shirtக்கும் upgrade ஆகியிருந்த காலம். 

1989 ஆண்டு முழுவதும் ஈபிகாரன்களின் பிள்ளைபிடி கொடுமைக்கு பயந்து வீட்டில் குமர்ப்பிள்ளைகளை போல் ஒதுங்கியிருந்தும், O/L சோதனைக்கு படிப்பதிலும் மெதுவாக கழிந்தது. O/L சோதனை முடிய கிடைத்த அரிய சமாதான கால விடுமுறையை தியேட்டரிலும், நண்பர்களின் வீடுகளில் டெக்கில் திரைப்படம் பார்ப்பதிலும், கிரிக்கட் மட்ச்கள் ஆடுவதிலும், சைக்கிளில் சுழற்றி கொண்டு திரிவதிலும் பிரயோசனமாக்கினோம். 

கடைசி O/L சோதனை முடிந்த அன்றிரவு யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் பார்த்த படம் Lady Chatterley's Lover. அதற்கடுத்த கிழமை வெலிங்டன் தியேட்டரில் வருஷம் 16 படம் பார்க்க, பதினாறே வயது நிரம்பிய நாங்கள் பதினா…

மறக்கேலாது

Image
காலை எழுந்ததும் முதல் வேலையாக, யுத்த களத்தில் வெற்றி செய்தி வந்ததா என்றறிய ஏக்கத்துடன் புதினம், தமிழ்நாதம், Tamilnet இணையத்தளங்களை துலாவிய நாட்களை மறக்கேலாது. 

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் இருக்கும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குறிக்கும் வரைபடத்தையும், சுருங்கிக்கொண்டிருக்கும் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளையும், பார்க்க பார்க்க நெஞ்சம் பதறியதையும் மறக்கேலாது.

பகலிலும் இரவிலும், வேலையிலும் பயணத்திலும், மணித்தியாலத்திற்கு பலமுறை இணையத்தில் நுளைத்து நல்ல செய்தி வராதா என்று அங்கலாய்த்த கணங்களின் வேதனையை மறக்கேலாது.

வேலை முடிந்து ரெயிலேறி cityக்கு போய் பங்குபற்றிய ஆர்பாட்டங்கள், காரேறி கன்பரா போய் கலந்து கொண்ட ஊர்வலங்கள், இணையத்தில் கலந்து கொண்ட பெட்டிசன்கள் என்று ஒவ்வொரு நாளும் நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும், சனத்தையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் கழிந்த பொழுதுகளையும் மறக்கேலாது.

ஜநா மன்றம் முதல் அமெரிக்க காங்கிரஸ் தொட்டு ஒஸ்ரேலிய பாராளுமன்றம் வரை பதறியடித்து புலம்பெயர் தமிழர் தட்டிய கதவுகள் எதுவும் திறக்கப்படாததை மறக்கேலாது.
நியூயோர்க், டொரொன்டோ, லண்டன், ச…

CIMA காலங்கள்

Image
ஏப்ரல் 1, 1994 பெரிய வெள்ளிக்கிழமை (Good Friday)
அமெரிக்காவில் பில் கிளின்டன் 1993, 20 ஜனவரியில் ஆட்சிகட்டிலேற அதே ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, மே தின ஊர்வலத்தை ஆமர் வீதி சந்தியில் முன்னின்று நடாத்திக் கொண்டிருந்த இலங்கையின் ஜனாதிபதி மோசம் போனார். பிரேமதாசவிற்கு பின் ஜனாதிபதியான டி.பி. விஜயதுங்க, பெரும்பான்மையினத்தினர் மரமென்றும் சிறுபான்மையினர் மரத்தை சுற்றி வளரும் கொடிகள் என்றும் இனவாதம் கக்கி கொண்டிருக்க, நாங்கள் முழு மூச்சாக CIMA படித்து கொண்டிருந்தோம்.

நம்புங்கடா.. புத்தகத்தை விட்டு கண்ணெடுக்கவில்லை


CIMA வகுப்புகளில், stage 1 மற்றும் 2 தாண்டி stage 3க்கு வர, இளையராஜாவின் "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை, காய்ஞ்சு போச்சுடா" பாட்டு தான் நினைவுக்கு வரும். Stage 1,2ல் இருக்கும் அழகிய சரக்குகளை 3ல் காண கிடைக்காது. அநேகமாக கையெடுத்து கும்பிட வைக்கும் அக்காமாரும், கண்டவுடன் தலைதெறிக்க ஓட வைக்கும் அன்டிமாரும் தான் stage 3 வகுப்புகளின் முன் வாங்கை அலங்கரிப்பார்கள்.
என்ன கொடுமை சரவணா

காய்ஞ்சு போன stage 3 வகுப்புகளிலிருந்து மீண்டு, கண்களை குளிர்வித்து உள்ளத்தை உற்சாகப்படுத்த, நாங்கள் …

ஓர் கூர்வாளின் நிழலில்

Image
துன்முகி தமிழ்ப்புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த இளைய தளபதி விஜய்யின் தெறி திரைப்படம் பற்றி விமர்சிக்க முடியாது. ஏனெனில், தெறி திரைப்படத்தின் கதை சத்திரியன் படத்திலிருந்து உருவிய  காட்சிகளையும் பாட்ஷா படத்திலிருந்து செருகிய கதை களத்தையும் ராஜா ராணி படத்தை தழுவிய வசனங்களையும் கலந்து உருவாக்கிய படையல். தனித்துவமற்ற எந்த படைப்பும் விமர்சனத்திற்கு தகுதியானதல்ல.

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எழுதியதாக வெளிவந்திருக்கும் "ஓரு கூர்வாளின் நிழலில்" புத்தகமும், தெறி படத்தை போன்று விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. வாசிக்கும் போது எங்கே செருகல் இருந்தது எங்கே உருவல் நடந்தது என்று ஜயம் ஏற்படவைத்த வித்தியாசமான வாசிப்பனுபவத்தை "ஓர் கூர்வாளின் நிழலில்" தந்தது. புத்தகத்தை சுற்றி எழும் விமர்சனங்களிற்கு பதிலளிக்க வேண்டிய புத்தகத்தை எழுதிய தமிழினியும் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

கடந்த மாதம், தம்பி தமிழ்ப்பொடியன் வீட்ட வந்து (அவசரத்தில் தேத்தண்ணி கூட கொடுக்கவில்லை, மன்னிக்கவும்) "கூர்வாளை" தந்துவிட்டு "ஆதிரையை" கடத்தி கொண்டு போனார…