Posts

Showing posts from June, 2016

கபாலிடா...

Image
அடிக்கிற மெல்பேர்ண் கடுங்குளிரையே அடங்க வைக்கிறது கபாலி படத்தின் பாடல், நெருப்புடா . காலங்காத்தால காரில் படர்ந்திருக்கும் பனியையே உருக வைக்கும் சூட்டை கிளப்பும் பாடல், நெருப்புடா. நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றி, மயிர்கூச்செரியும் நிலையை அடைய வைக்கும் சந்தோஷ் நாராயணணின், டுவைங் டுவைங் கிடார் இசையிலமைந்த கபாலியின் theme song, நெருப்புடா. பாடலின் இடையில் வரும் ரஜினிகாந்தின் காந்தக் குரல், கொளுந்து விட்டெரியும் பாடலுக்கு இன்னும் தீ மூட்டிகிறது. 
"விடுதலை அடைவிடையென நினைபயத்தையே முறை பகல் கனவை உடை"
தளபதி படத்தில் இடம்பெறும் "இது சூர்யா சார், உரசாதீங்க"  என்ற மணிரத்தினத்தின் ஒற்றை வசனமும், அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் படிகளில் மேலேறி, "மலைடா.. அண்ணாமலைடா" என்று  படிகளில் கீழிறங்கிய சரத்பாபுவை பார்த்து கர்ஜிக்கும் வசனமும் தான் நெருப்புடா பாடல் வரிகளின் கரு என்கிறார், இந்தப் பாடலை எழுதி பாடியிருக்கும் அருண் ராஜா காமராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 41 வருட திரைத்துறை வரலாற்றில், முதல் முறையாக பாடலெழுதி பாடிய பெருமையை அருண் ராஜா காமராஜ் பெறுகிறார். 
"நான் வ…

மீண்டும் மீட்பர் (சிறுகதை 2)

Image
வெள்ளை நிற அரைக்கை ஷேர்ட்டும் கறுப்பு நிற ட்ரவுசரும் அணிந்த மீட்பரும் அவரது பன்னிரு தளபதிகளும் மேடையில் ஏற,  கரகோஷமும் உற்சாக குரல்களும் அரங்கத்தை அதிர வைத்தன. மீட்பரின் குழுவில் மீட்பரிற்கு அருகில் நின்ற வயதான ஓருவர் மட்டும் நீல நிறத்தில் ஷேர்ட் அணிந்திருந்தார். 

மீட்பரின் கண்கள் அரங்கில் பறந்து கொண்டிருந்த சிங்கக் கொடியை நோக்கிய மறுகணம், அதை அகற்ற அவரது தளபதிகளில் ஒருவர் அரங்கின் முகப்பில் ஏறிக்கொண்டிருந்தார். கொடியோடு, சிரிக்கும் ரணிலின் படமும் கீழிறங்க, மீண்டும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. 

மீட்பரிற்கு வலப்பக்கம் சிரித்த முகத்துடன் இருந்தவர், தான் அணிந்திருந்த Headset Micல் பேச தொடங்கினார். மீட்பரின் பின்னால், ஆஜானுபாகுவான இருவர் விறைப்பாக நின்றிருந்தார்கள். புன்முறுவலுடன் பேசத்தொடங்கிய மீட்பரின் வலதுகரமானவர், "இந்த மண்ணில் இடம்பெற்ற தாயக மீட்புப்போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்துவோம்" என்றார்.

"அகவணக்கம் என்றால் என்ன ?" பக்கத்தில் நின்ற பெரியவரிடம், சாந்த கேட்க, அவர் தனது ஒரு விரலை உதட்டில் வைத்து மெளனா…

மீண்டும் மீட்பர் (சிறுகதை)

Image
மே 18, 3009


ஓடக்கரை வீதி, பருத்தித்துறை,  யாப்பாபடுன மாவட்டம், ரஜரட்ட பிராந்தியம் சிரிலங்கா

"அம்மே.. டக் சொல்லி என்ட சாப்பாட்டை தென்ட.. வெலாவ போகுது" சாந்த அவசரப்படுத்தினான். குசினிக்குள் சாந்தவின் அம்மா கீதா குமாரசிங்க,  அவனது lunch boxஜ தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

"தம்பி, போக முதல் அம்மப்பாட படத்தை Facebookல் போட்டு அகவணக்கம் status போட்டிட்டு  போடா" சாந்தவின் அம்மப்பாவான மேஜர் சாந்தன், இற்றைக்கு நூறாண்டுகளிற்கு முன்னர் தமிழர் படையில் போராடி மரணித்தவர். தன்னுடைய தகப்பனார் சாந்தனின் ஞாபகமாக தான் தன்னுடைய மகனிற்கு சாந்த என்று பெயரிட்டிருந்தாள் கீதா. 

சாந்தன் என்று தமிழ் பெயர் வைக்க பயத்தில் "ன்"ஐ வெட்டி எறிந்து விட்டு நல்லிணக்க திருவிழாவில் சங்கமமாகிய தமிழர்களில் கீதாவும் ஒருத்தி. கீதாவின் கணவன் குமாரசிங்கமும், "ம்"க்கு விடை கொடுத்து விட்டு குமாரசிங்க ஆகியதால் தான் அவனிற்கு பருத்தித்துறை நகரசபையில் வேலை கிடைத்தது. 

"அம்மே, சரியா ஆறு மணிக்கு பட்டங்கண்ணவாலு" 2009ல் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நாளின் நூற்றாண்டு நினைவுநாளில் பங்குபற்றதான் …

கோலாலம்பூர் குதூகலம் 2

Image
கோலாலம்பூர் கொண்டாட்டத்திற்கு KL Birthday Bash என்று பெயர் சூட்டப்பட்டது. பரி யோவான் கல்லூரியின் சிவப்பு கறுப்பு நிறத்திலான சிறப்பு T'Shirt அடிக்கும் பொறுப்பு அருள்மொழியின் தலையில் சுமத்தப்பட்டது. கோலாலம்பூர் வரும் இளவல்களிற்கு நான்கே நான்கு கென்டிஷன் மட்டும் விதிக்கப்பட்டது. 

முதலாவது கென்டிஷன், ஆளுக்கொரு Scotch போத்தல் கொண்டு வரவேண்டும், அதுவும் Black Label அல்லது Glenfiddich மட்டும். சிரிலங்கன் பழஞ்சாராயம், ஒஸ்ரேலியன் wine, லண்டனிலிருந்து JD, கனடாவிலிருந்து Cognac எல்லாம் கொண்டுவர வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லியும், சில அன்புள்ளங்கள் அதையும் கொண்டுவந்து பரவசப்படுத்தினார்கள். "No bottle, No entry" என்ற இந்த முதலாவது நிபந்தனை கடுமையாக அமுல்படுத்தப்பட்டது. கேணல் ஆதியும் சத்தி மாஸ்டரும் இருந்த அறையில் போத்தலை ஒப்படைத்தவர்களிற்கு மட்டும் தான் சிறப்பு T'Shirt கையளிக்கப்பட்டது. 

இரண்டாவது கென்டிஷன், கோலாலம்பூர் கொண்டாட்டம் பசங்களுக்கு மட்டுமே, Strictly for Boys only. அதாவது பிள்ளை குட்டி, மனிசி, காதலி என்று யாரையும் காவிக்கொண்டோ கூட்டிக்கொண்டோ, கோலாலம்பூர் மாநகர எல்லை…

கோலாலம்பூர் குதூகலம்

Image
June 5, 2013 புதன்கிழமை இரவுமெல்பேர்ண் சர்வதேச விமான நிலையம்
யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு உயர்தர பிரிவினரின் (SJC 92) 40வது பிறந்ததாள் கொண்டாட்டத்திற்கு, கோலாலம்பூர் நோக்கி பயணிக்கும் ஒஸ்ரேலிய படையணி அணித்திரள தொடங்கியது. சிட்னியிலிருந்து சிறப்பு விமானத்தில் சத்தி மாஸ்டர் வந்திறங்கவும் மெல்பேர்ண் குறூப் விமானநிலையத்தை அடையவும் கணக்காக இருந்தது. கன்பராவிலிருந்து பறந்துவந்த கணாவின் விமான சுணங்கி இறங்கியது. Air Asiaவில் Check-in முடித்துவிட்டு, விமான நிலையத்தின் McDonaldsல் Glenfiddchம் Cokeம் கலக்க, "Cheers மச்சான்", ஆட்டம் தொடங்கியது. 

அதேநேரம் வெள்ளவத்தையிலிருந்து சிறப்பு Rosa மினிபஸ், கொழும்பாரையும் யாழ்ப்பாணிகளையும், லண்டன் கனடாவிலிருந்து வந்திருந்த சில புலம்பெயர் தமிழர்களையும் ஏற்றிக்கொண்டு கொட்டகேன ஊடாக கொழும்பு விமான நிலையம் நோக்கி புறப்படுவதாக Facebookல் status வந்தது. ஜந்து நாட்களிற்கு முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்ட ஷெல்டனோடு, மட்டக்களப்பு இறால் பொரியல், மன்னார் மரை வத்தல், புலோலியூர் புழுக்கொடியல், பலாலி பயிற்றம் பணியாரம்,  பருத்தித்துறை வடை எல்ல…