Posts

Showing posts from July, 2016

ஜூலை மாதம்...

Image
"ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு" என்ற பாடல் 90களில் வெளிவந்த புதியமுகம் என்ற படத்தில் வரும். AR ரஹ்மானின் ஆரம்பகாலங்களில் வந்த இந்த பாடலை "கபாலி தோல்வி" புகழ் வைரமுத்துவே எழுதியிருந்தார். "அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு" போன்ற புரட்சிகர வரிகளை தாங்கிய இந்த பாடலை SPB பாடியிருந்தார்.

இலங்கைத் தமிழர்களிற்கு ஜூலை மாதம் வந்தால், நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்கிவிடும். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல சம்பவங்கள் ஜூலை மாதத்திலேயே இடம்பிடித்தன. விடுதலைப் புலிகள் இயங்கிய காலத்தில், நவம்பர் மாதத்திற்கு அடுத்தபடியாக இலங்கை இராணுவம் உச்சபட்ச உஷார் நிலையிலிருந்த மாதம் ஜூலை மாதம் தான். அவயள் எவ்வளவு உஷாரா இருந்தும்.. வேண்டாம் விடுவம்.
கறுப்பு ஜூலை என வர்ணிக்ப்பபடும் தமிழர்களிற்கெதிரான இனக்கலவரம் இடம்பெற்ற 1983ம் ஆண்டு ஜூலை மாதத்தை, இலங்கைத் தமிழர்கள் மறந்தும் மறக்கமாட்டார்கள். 23 ஜூலை 1983ல் தின்னவேலியில் வெடித்த கண்ணிவெடி சத்தம், யாழ்ப்பாணத்தை இன்னும் உலுக்கிக் கொண்டேயிருக்கிறது. ஜூலை 25, 1983ல் கொழும்பு டமில்ஸை சிங்கள காடையர்கள் கொல்லாமலும…

கபாலி..அனுபவப்பகிர்வு

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் அன்றிலிருந்து இன்றைவரை hypeம் பில்டப்பும் அதிகமாகவே இருக்கும். படம் பூஜை போடமுதலே யாருடைய டிரக்ஷனில் ரஜினி அடுத்த படம் நடிக்க போகிறார் என்பதில் ஆரம்பமாகி எந்தெந்த டிரக்கடர்ஸிடம் கதைகேட்டார் என்று பில்டப் எகிறி, hype படலம் இறக்கை கட்டிப் பறக்கும். 

படம் எடுக்க தொடங்க, ஷூட்டிங் ஸ்பொட் படங்கள் லீக்காகி, பாடல்கள் வெளிவந்து, டீஸர் யூடியூப்பில் ஏற, hype உச்சக்கட்டத்தை நெருங்கும். படம் ரிலீஸாகும் திகதி அறிவிக்கப்பட, பில்டப் ச்சும்மா அதிரும். இந்த ஓவர் hype படத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாவதத்திற்கு அப்பால், இந்த hypeஐயும் பில்டப்பும் அனுபவித்து அடையும் ஆனந்தம் உண்மையிலேயே அளவில்லாதது தான். 

ஜூலை 22, 2016 காலையில் அடித்த அலார்ம் "கபாலிடா.. எழும்புடா" என்று தான் அடித்தது. நேற்றிரவு முழுக்க கபாலி பற்றிய பேட்டிகள், தலைவரின் பழைய படங்களின் முக்கிய காட்சிகள், பாடல்கள் என்று பார்த்து கபாலி படம் பார்க்க warm up எடுத்திருந்தேன். காலம்பற தேத்தண்ணி குடித்துக்கொண்டு WhatsAppஜ திறக்க வாழ்க்கை வெறுத்திச்சு.

கபாலியை அமெரிக்காவில் காட்டுறாங்கள், லண்டனில்…

ஜயோ என்ர Bat (ஜூலை 83 சிறுகதை)

Image
"டேய் திலீபன் எழும்புடா, பள்ளிக்கூடத்திற்கு நேரமாச்சு" அம்மா வழமைபோல் தட்டி எழுப்பினா. கண்ணை கசக்கி, சோம்பல் முறித்து, கட்டிலால் இறங்கி, அறை மூலையில் இருக்கும் எனது cricket batல் வழமைபோல் கண்விழித்தேன். 
போனவருஷம் என்னுடைய பிறந்தநாளிற்கு அப்பா வாங்கித்தந்த bat. Astra margarine பக்கெட்டோட வாற Roy Dias சிரித்துக் கொண்டிருக்கும் sticker ஒட்டி வைத்திருந்தேன். Roy Dias என்னுடைய favourite player, அவரை மாதிரி விளையாடி சிரிலங்கா கிரிக்கட் அணிக்கு விளையாட வேண்டும் என்பது எனது கனவு, நம்பிக்கை, இலட்சியம், வெறி.

நேற்று பின்னேரம் எங்கட இராமகிருஷ்ண லேனுக்குள் நடந்த மேட்சில் அந்த batஆல் அடித்த குட்டி சிக்ஸர் நினைவில் வர, batஜ தூக்கி முத்தமிட்டுவிட்டு, Roy Dias போல மிடுக்காக straight driveஜ ப்ராக்டீஸ் பண்ணினேன், மேசையில் காலை 6.45 செய்தி ஒலிபரப்பிக்கொண்டிருந்த National Panasonic radio அருந்தப்பு தப்பியது.  
"டேய், வான் வரப் போகுது, ஏமாந்து கொண்டிராமல் வெளிக்கிடு" அம்மா கத்தினா. படுக்கை அறையால வெளில வந்து பாத்ரூமுக்கு போகும் வழியில், ஹோலிலிருந்த  மெய்கண்டான் கலண்டரின் தாளை அப்பா க…

கந்தசாமியும் கலக்சியும்

Image
2014ம் ஆண்டு, சென் ஜோன்ஸில் படித்தவனென்றால் முள்ளுக்கரண்டியால் chicken சாப்பிட்டுக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி Johnians always play the game என்று பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டம் என்ற மாயையை தகர்த்து.. யாழ் பரியோவானில் எமக்கு செந்தமிழும் தமிழ் பற்றும் தமிழ் தேசிய சிந்தனையும் ஊட்டியே வளர்க்கப்பட்டோம் என்பதற்கு சான்றாக ஜேகேயின் "கொல்லைப்புறத்து காதலிகள்" புத்தகம் மலர்ந்தது.

1990களின் யாழ்ப்பாண வாழ்க்கையை, கடுமையான யுத்தத்திற்குள்ளும் கொடுமையான பொருளாதார தடைக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை உணர்வு மாறாமல், சுவாரசியமாக பதிந்த நனவிடை தோய்தல் பதிவாக "கொல்லைப்புறத்து காதலிகள்" வெளிவந்தது.

இரு ஆண்டுகள் கழித்து, ஜேகேயின் இரண்டாவது புத்தகம் பிறிதொரு தளத்தில், ஈழத்து எழுத்தாளர்கள் இதுவரை காணாத புதிய களத்தில், "கந்தசாமியும் கலக்சியும்" என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கலக்சியும் என்ற சொல்லில் "சி" பாவித்தது சரியா இல்லை "ஸி" பாவித்திருக்க வேண்டுமா என்ற பஞ்சாயத்தை இப்போதைக்கு தள்ளி வைப்போம். 

"கந்தசாமியும் கலக்சியும்" ஜ…

இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்..

Image
'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' மனம் உறுதிமொழி எடுத்துக்கொண்டது.
'டேய், இது நூத்தி தொண்ணூத்தி ஒம்பதாவது உறுதிமொழி..பார்க்கலாம் பார்க்கலாம், நீயும் உன்ட உறுதிமொழியும்' மூன்று முடிச்சு ரஜினிகாந்தோடு கதைத்த அதே மனசாட்சி, ரோசா மினிபஸ்ஸின் கண்ணாடியில் என்னைப் பார்த்து கதைத்தது, நக்கலடித்தது.

'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 

அவள் ஒரு கொழும்புக்காரி, அதுவும் மண்டைக்காரி, உயர்தரத்தில் மட்ஸ் படிக்கும் மண்டைக்காரி. கொழும்புக்காரிகளுக்கு கொழுப்பு அதிகம், அதுவும் மண்டைக்காரி வேறு என்பதால் எடுப்பும் கனக்க கூட. கொழும்பு லேடீஸ் கல்லூரியில் படிப்பதால் தடிப்புக்கும் குறைவில்லை. ஆக மொத்தம் அவள் ஒரு எடுப்பும் தடிப்பும் கொழுப்பும் மிகுந்த கொழும்பு மட்ஸ் மண்டைக்காரி.

'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 

நானோ ஒரு யாழ்ப்பாணத்தான், அதுவும் கொமர்ஸ் படிக்கிற மொக்கன். கொழும்பு இந்துவில் அமலன் "பனங்கொட்டை, பனங்கொட்டை" என்று அடிக்கடி கூப்பிட்டு கடுப்பேத்துவான். கொழுப்பு, தடிப்பு எதுவுமே இல்லாத ஒல்லிப்பிச்சான் தேகம், முகத்தின் அரைவாசியை மற…

செவ்வாய்கிழமை மனிதர்கள்

Image
"கிட்டடியில் நானொரு கதை கேள்விப் பட்டேன்" மொரி சொன்னார். மொரி கண்ணை ஒரு கணம் மூட, நான் காத்திருந்தேன்.
"ஓகே, அந்தக் கதை ஒரு குட்டி அலையைப் பற்றியது. சமுத்திரத்தில் துள்ளி குதித்து மகிழ்கிறது அந்த குட்டி அலை. வீசும் தென்றலில் தவழ்ந்து, அடிக்கும் காற்றில் மிதந்து, குதூகலிக்கும் குட்டி அலையின் மகிழ்ச்சி, தனக்கு முன்னாள் செல்லும் அலைகள் கரையில் மோதுவதைக் கண்டதும் முடிவிற்கு வருகிறது." 
"கர்த்தரே, என்ன கொடுமை,' குட்டி அலை கதறியது. 'எனக்கும் அதே கதிதான் நடக்கப் போகிறது !'
"அப்பொழுது இன்னொரு அலை குட்டி அலையின் பின்னால் வந்தது. குட்டி அலையின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தைக் கண்ட புதிய அலை, குட்டி அலையை கேட்டது 'ஏன்டா மச்சான், உனக்கு என்ன பிரச்சினை?'
"குட்டி அலை சொல்லியது 'உனக்கு பிரச்சினை விளங்கேலேடாப்பா! நாங்களெல்லாம் கரையில் மோதி நாசமாகப் போகிறோம்! நாங்கள் இல்லாமல் போகப் போகிறோம்! என்ன கொடுமை மச்சான்'
"புதிய அலை சொல்லியது, 'மச்சான், உனக்குத் தான்டா விளங்கேல்ல, நீ ஓரு அலை அல்ல, நீ சமுத்திரத்தின் ஒரு பகுதி' "