Posts

Showing posts from August, 2016

1985: இலங்கையில் இந்தியா

Image
ஜூலை 13, 1985ல் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை ஆகிய கோட்பாடுகளடங்கிய திம்பு பிரகடனத்தை தமிழ் இயக்கங்கள் ஒற்றுமையாக வெளியிட, இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் இந்திய அணுசரணையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை முறிகிறது.  அதே காலப்பகுதியில் லண்டனில் நடந்த ICCயின் கூட்டத்தில், 1987 உலக கிரிக்கட் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்ற வாக்களிப்பில், இந்தியாவிற்கு ஆதரவாக இலங்கை வாக்களிக்கிறது.

இலங்கை அளித்த வாக்கிற்கு பிரதியுபகாரமாக, இந்திய கிரிக்கட் அணியின் முதலாவது இலங்கை விஜயம் 1985 ஓகஸ்ட் இறுதியில் ஆரம்பமாகும்  என்று BCCI வாக்குறுதியளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயத்தை பகீஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. முதலில் விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்த இந்தியா, இலங்கையின் இராஜதந்திர அழுத்தங்களிற்கு அடிபணிந்து, ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில்  பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்துகிறது. 

இலங்கை விஜயம் நடைபெறாது என்று நம்பி இங்கிலாந்தில் county cricket விளையாட போன அமரநாத், வெங்சக்கார், சாஸ்திரி போன்ற இந்திய வீர…

கிரிக்கட், சிலோன், சதாசிவம்

Image
(படத்தில் Don Bradmanம் மகாதேவன் சதாசிவமும்)

ஒஸ்ரேலியாவிற்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வென்று, அஞ்சலோ மத்தியூஸின் இலங்கை கிரிக்கட் அணி சரித்திரம் படைக்க, சமூக வலைத்தளங்களிலும் வேலைத்தளத்திலும் ஏற்படுத்திய அதிர்வலை, என் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எண்பதுகளின் இறுதியில், அஞ்சலோ மத்தியூஸ் வத்தளையில் நான் வசித்த என் சித்தி வீட்டிற்கு பின் வீட்டில் தான் பிறந்தார் வளர்ந்தார். சிறுவனான அஞ்சலோவிற்கு கிரிக்கட்....வேண்டாம் விடுவம். 

ஒஃபிஸில் ஒஸிக்காரன் என்னை சிரிலங்கனாக பார்க்க, கூடித்திரிந்த நண்பர்கள் வெடி கொளுத்தாத குறையாக கொண்டாட, ஃபேஸ்புக்கில் Mynthan Siva, Kishoker, Jeevatharshan மூவரும் அலப்பறை திருவிழா நெறிப்படுத்த, நான் மட்டும்.....ஏன் ? எதற்கு ? எப்படி ?

இந்த கேள்விகளுக்கு விடை தேடி, நடந்து வந்த பாதையை திரும்பி ஒருக்கா பார்ப்போம். அந்த பாதையில் பயணிக்கும் போது, "கறுப்பு Bradman" என்று வர்ணிக்கப்பட்ட மகாதேவன் சதாசிவம் என்ற சிலோன் கிரிக்கெட்டரையும் நினைவுறுத்திக் கொண்டே செல்வோம்.
----------------------------------------------------
பெப்ரவரி 17, 1982ல் சிரிலங்கா…

கணவாய்க் கறி

Image
"கணவாய்க் கறி ஆறப்போகுது, கெதியா குளிச்சிட்டு வாரும்"
ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மனிசி அன்பாய் கூப்பிட, பாத்ரூமுக்குள் பாய்ந்தேன். சுடுதண்ணி அளவா வருதா என்று பார்க்க மினக்கெட, "என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" பாட்டு  சூரியன் FMல் ஒலிக்க தொடங்கியிருந்தது. Lux சோப் நான் போட, சூரியன் FM, இளையராஜாவின் "நீ தானே என் பொன்வசந்தம்" பாட்டு போடுது. 80களில் ஶ்ரீதேவி, Lux சோப் போட்டு குளித்த நாளிலிருந்து.. விடுவம், அது தனிக்கதை.

குளித்து முடித்து, சாமி கும்பிட்டுவிட்டு வர, குத்தரிசி சோறும் கணவாய்க் கறியும் கோப்பையில் எனக்காக காத்திருக்குது. கோப்பையின் ஓரத்தில் கத்தரிக்காய் பால்கறி வேற இடம்பிடித்திருக்குது. கணவாய் கறியை மட்டும் அளவா கிள்ளி சோத்தில் குழைத்து அள்ளி வாயில் வைக்க....சொல்லி வேலையில்லை, சொர்க்கத்தின் வாசற்படி தெரிந்தது.
"எப்பிடியிருக்கு ?" மனிசி கேட்டா
"அந்த மாதிரி.. கணவாய் கறி வைத்த தங்க கைக்கு நித்யகல்யாணியில் ஒரு வைரமோதிரம் வாங்கி தாறன்" காதல் வாக்குறுதியொன்றை வாரி வழங்கினேன்.
"உந்த கதை வசனத்தை உம்மட bl…

கொமர்ஸ்காரரும் கொமர்ஸ்காரிகளும்

Image
கொமர்ஸ்காரர் ஒரு தனி ரகம், அவர்களும் ஒரு வகை மன்னர்கள் தான், சப்பலில் அல்ல, A/L வாழ்க்கையை அனுபவித்ததில் அவர்கள் தான் உண்மையான A/L மன்னர்கள். படிப்போடு நல்லா பம்பலடிக்கவும்,  ஸ்டைலா பெட்டையளை சுழற்றவும் தெரிந்த, சூப்பர்காய்கள். 
O/L முடித்து கொமர்ஸ் படிக்க வாற குறூப்புகள் பலவகை. 
முதலாவது குறூப் கொமர்ஸில் கண்டதும் கொண்ட காதலால்  படிக்கவாற கோஷ்டி. O/L ல் அநேகமா ஒகஸ்ரின் மாஸ்டர் மாதிரி ஆக்களிட்ட படிச்சு, கணக்கியலில் வசியப்பட்டு வாற சனம்.  இவர்கள் கண்ணும் கருத்துமாய் படிப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் tuitionலும் ஒரு சொல்லு விடாமல் notes எடுப்பார்கள், part 1 க்கு வேற part 2 க்கு வேற, schoolற்கு வேற tuitionற்கு வேற என்று கன கொப்பிகள் வைத்திருப்பார்கள். 

Management enter பண்ணோணும், அதுவும் meritல் J'puraவில் B.Sc in Accounting கிடைக்கோணும் என்ற இலட்சியத்தில் "எதையும் plan பண்ணி செய்யும்" ரகம். அநேகமாக இவர்கள் கள்ளமாக ஒரு வருடத்திற்கு முதலே syllabus cover பண்ணி, சோதனைக்கு ரெடியாகி private candidate ஆக சோதனையும் எடுத்து trial பார்த்திருப்பினம், வெளில சொல்லமாட்டினம்.

இரண்டாவது கு…