Posts

Showing posts from September, 2016

Sportstar

Image
வியாழக்கிழமை மத்தியானம்  தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய்.. என்ன செய்யிறாய்?"
"வேலை தான்டா செய்யுறன்"
"அதை தான் எப்பவும் செய்யுறாய்"
"உனக்கு இப்ப என்னடா பிரச்சினை?"
"வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய சம்பவம் பற்றி கேள்வி கேட்கோணும்.. வடிவா யோசிச்சு சொல்லு"
"கொஞ்சம் பொறு கதவை பூட்டிட்டு வாறன்... ம் இப்ப சொல்லுடா"
"அந்த காலத்தில யாழ்ப்பாணத்தில் நான் சேர்த்து அடுக்கி வைத்திருந்த Sportstar மகஸினுகளிற்கு என்னடா நடந்தது?
"அது வந்து.. நீ கொழும்புக்கு போனா பிறகு.."
"பிறகு..."
"சொன்னா எனக்கு அடிக்க வருவாய்..அம்மாவை கேள் "
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
-----------------------------------

1980களில் கிரிக்கெட்டை விரும்பிய எவரும் Sportstar magazineஐ மறந்திருக்க மாட்டார்கள்.  சென்னையிலிருந்து பதிப்பாகும் The Hindu குழுமத்தின் வாராந்த விளையாட்டுத்துறை சஞ்சிகை Sportstar. 'For a ringside view of the world of sport’ என்ற தலைப்பு வாசகங்களைத் தாங்கி வெளிவந்த Sportstar, இன்டர்நெட்டும் டீவியும் இல்லாத காலத்தில் யாழ்…

அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,

Image
அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,
நமது நாடும் நம் மக்களும் நலமின்றி வாடும் போது உங்கள் ஆத்மா இன்னும் சாந்தியடைந்திராது. ஆதலால், நலமறிய ஆவல் என்று மொக்குத்தனமாக கேட்டு, எங்களை பேயன்களாக்கும் எங்களது இன்றைய தலைவர்கள் போல், உங்களை முட்டாளாக்க விரும்பவில்லை

இந்த ஆண்டுடன் நீங்கள் காவியமாகி 29 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு இன்னும் நனவாகவில்லை. நீங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய பிரச்சினைகளும்  இன்று வரை தீரவில்லை. 

உண்மைய சொல்ல போனால், பிரச்சினை இன்னும் பெரிசாகி விட்டது. ஆனால் உங்களை போல எங்களுக்காக போராட இன்று யாருமில்லை. எங்கள் தலைவர்கள் பதவிகளிற்காக தங்களுக்குள் தான் போராடினம், மக்களிற்காக போராட யாரும் முன்வருவதில்லை.
செப்டம்பர் 15, 1987 அன்று காலையில் பிரதித்தலைவர் மாத்தையா அழைத்து வர, நல்லூர் கந்தன் முன்றலில் வயதான அம்மா ஒருவர் நெற்றி திலகமிட்டு ஆசி வழங்க, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகால சட்டம் நீக்கல், ஊர்காவல் படையினரின் ஆயுத களைவு மற்றும் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் என்ற ஜந்து கோரிக்கைகளை முன் வைத்து நீங்கள் உ…

CIMA காலங்கள்: பாணுதேவன்

Image
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் கொழும்பில் CIMA படித்தவர்கள் எவரும் பாணுதேவனை மறந்திருக்க மாட்டார்கள். எண்பதுகளில் ICMA காலத்திலிருந்து தொண்ணூறுகளில் CIMAவாக பெயர் மாறிய போதும், Syllabusகள் மாறியபோதும், பாணுதேவன் அசராமல் தனது விரிவுரைப் பணி தொடர்ந்தார். 

எழுபதுகளில் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் உயர்தரத்தில் பொருளியல் கற்பிக்கும் ஆசிரியராக பாணுதேவன் பணியாற்றினார். கம்யூனிசத்தில் அதீத பற்று கொண்டிருந்த பாணுதேவன், பரி யோவான் நிர்வாகத்தோடு முரண்பட்டு, வேலையை இராஜினாமா செய்துவிட்டு, கல்லூரிக்கெதிராக இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்ந தினம், நீதிமன்றம் செல்ல பஸ்ஸிற்கு காத்திருந்த பாணுதேவனை கண்ட பிரதிவாதியான பரி யோவான் கல்லூரி அதிபர், பாணுதேவனை தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு நீதிமன்றம் சென்று வழக்கை எதிர்கொண்டார்.  பாணுதேவனின் மேல் பெருமதிப்பு கொண்டு அவரை தனது காரிலேயே அழைத்து சென்ற பரி யோவான் அதிபர், காலஞ்சென்ற ஆனந்தராஜா மாஸ்டர். வழக்கில் பாணுதேவன் வென்று இழப்பீடும் பெற்றாராம்.
-----------------------------
1990களில், கொழும்பில் மூன்று நிறுவனங்கள் CI…

உடுவிலில் ஏன் மைத்ரி ?

Image
1816ல் பிரித்தானிய மெதடிஸ்ட் திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட யாழ் மத்திய கல்லூரி, 1820ல் அமெரிக்க மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஆசியாவின் முதலாவது பெண்கள் பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி, 1823ல் பிரித்தானிய அங்கிலிக்கன் மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பரி யோவான் கல்லூரி உட்பட, வடகிழக்கில் இயங்கும் அனைத்து பாடசாலைகளும் தமிழர் அடைந்த கல்வி எனும் பலத்திற்கு வித்திட்ட பாசறைகள். 

1956ல் தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்து தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட தொடங்கிய சிங்களம், அடுத்து தமிழர்களின் கல்வியை குறிவைத்து நகர்ந்தது. 1960களின் ஆரம்பத்தில் சிறிமாவோ ஆட்சியில் கிறிஸ்தவ திருச்சபைகளால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகள் அரசுடைமையாக்கப் போவதாக அரசு அறிவித்தது. அரசுடைமையாக்கப்படாத பாடசாலைகளிற்கு ஆசிரியர்களின் சம்பளம் உட்பட எந்த நிதியுதவியும் அரசு வழங்காது என்றும் எச்சரித்தது.

சிங்கள அரசின் அறிவிப்பை எதிர்த்து நின்ற ஒரு சில பாடசாலைகளில் உடுவில் மகளிர் கல்லலூரியும் பரி யோவான் கல்லூரியும் அடக்கம். யாழ் மத்திய கல்லூரி அரசின் ஆணைக்கமைய அரசுடைமையாகியது.  அறுபதுகளில் பாடசாலை நடாத்த, வீடு வீடாக சென்று …

ஒபரேஷன் செங்கடல்

Image
"தமிழர்கள் இங்கு நிம்மதியாகத் தான் வாழ்கிறார்கள்.. அவர்களிற்கு உண்ண கிரிபத்தும், தங்க தகர கொட்டகையும் கொடுத்துள்ளோம். இன்னும் என்ன வேணும்? எங்கள் கிரிக்கட் அணியில் இடம் வேணுமா?" பிரதமர் விக்ரமவின் பதிலில் நக்கல் எட்டிப் பார்க்கிறது. 

அலரி மாளிகையின் அரசவையில் மன்னர் சேனா அரியணையை அலங்கரிக்க, அவருக்கு வலப்புறம் வீற்றிருந்த பிரதம மந்திரியார் விக்ரம தான் மேற்கண்டவாறு கொக்கரித்திருந்தார். மன்னருக்கு இடப்புறம் அமர்ந்திருந்த டமில் தலைவர் சம்பு, அரை நித்திரையில் இருந்தவர் போலிருந்தாலும், கையிலிருந்த டப்பாவிலிருந்து எதையோ எடுத்து கொரித்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்திற்கு முன்னர் தான், "கபாலி எனவா.. பராக்...பராக்..பராக்" என்று வாயிற் காப்பாளன் கத்த, சபை பரபரப்பானது. மலேசிய தமிழர்களிற்காக போராடி விடுதலை வாங்கிக் கொடுத்த கபாலீஸ்வரன், விறுக் விறுக் என்று நடந்து அலரி மாளிகையின் அரசவைக்குள் நுழைகிறார். அவரோடு கூட அவரது உதவியாளராக, பில்லா புகழ் நயன்தாராவும்.

அரியணையை நோக்கி கிடு கிடுவென்று நடந்த கபாலி, எதையோ விட்டு விட்டு வந்தவர் போல, சட்டென திரும்பி நடந்தார். அவரோடு கூட வந்த…

அம்மம்மா

Image
நமது வாழ்வில் பிறப்பாலும் திருமண பந்தத்தாலும் இணையும் உறவுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பார்கள்.  சில உறவுகள் வாழ்க்கைப்  பயணத்தில் இடைநடுவில் நம்மை விட்டு பிரிந்தாலும், நாம் சாகும் வரை நம் மனதை விட்டகலாதவை, காலங்கள் கடந்தும் நம்மோடு பயணிப்பவை.

அம்மம்மா என்ற உறவு, என்றைக்குமே மனதை விட்டகலாத ஒரு அற்புதமான அழகிய உறவு. அம்மம்மாமார்  பேரன்மாரிடம் அளவுக்கதிகமாக அன்பு செலுத்துவார்கள், அதுவும் மூத்த பேரன் என்றால் சொல்லி விளக்க தேவையில்லை. என்னுடைய அம்மம்மாவும் அப்படித்தான்..

1977 இனக்கலவரத்திற்கு பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற, பாடசாலை விடுமுறைகளிற்கு கொழும்பு வரும்போது அம்மம்மாவின் அன்பில் திளைத்த காலங்கள் இனிமையானவை. கிழமையில் இரண்டு மூன்று தரம் வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு மரக்கறியும் மீனும் வாங்க போவதும், அம்மம்மா பேரம் பேசி வாங்குவதும் சுவாரசியமான அனுபவங்கள். மரக்கறியும் மீனும் வாங்கி முடிய, வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு வெளியிலிருக்கும் சிவப்பு வெள்ளை நிறங்களில் பெயின்ட் அடித்த Milk Board கடையில் அம்மம்மா வாங்கித்தரும் பக்கெற்றில் வரும் குளி…