Posts

Showing posts from October, 2016

பரி யோவானின் மைதானம் 2

Image
பரி யோவானின் Primary school பொறுப்பாளராக துரைச்சாமி மாஸ்டர் இருந்த காலத்தில் இடைவேளை நேரத்தில் விளையாடக் கூடாது என்ற கொடுமையான விதி கடைபிடிக்கப்பட்டது. ஒளித்து பிடித்து விளையாடினவன், ஓடிபிடிச்சு விளையாடினவன், மாபிள்ஸ் அடிச்சவன் என்று சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே துரைச்சாமி மாஸ்டரின் அறையில் அடிவாங்க அணிவகுக்க, கிரிக்கெட் விளையாடி போர்க்குற்றம் இழைக்க யாரும் துணியவில்லை.


1980களின் ஆரம்ப காலங்களில் பாடசாலை பின்னேரம் மூன்றரை மணிவரை நடைபெற்றது. இடையில் பத்துமணிக்கு ஒரு சிறிய இடைவேளை, பின்னர் மதியம் ஒரு மணிநேரம் இடைவேளை விடப்படும். இந்த இரு இடைவேளைகளிலும் பரி யோவான் மைதானத்தில் மத்திய பிரிவு மாணவர்களின் வகுப்புகளிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அரங்கேறும்.  வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை கிடுகிடுவென சாப்பிட்டு விட்டு, பரி யோவானின் மைதானத்தில் மத்திய பிரிவு அண்ணாமார் விளையாடும் கிரிக்கெட் மட்ச் பார்க்க பறப்போம். 

ஒரே நேரத்தில் நாலைந்து மட்ச்கள் நடக்கும். ஒரு பக்கத்தில் சூட்கேஸுகள் விக்கெட்டுகளாக, அதை சுற்றி பார்வையாளர்கள் சூழ்ந்து நிற்க, மைதானம் நிரம்ப fielders சூழ, எங…

பரி யோவானின் மைதானம்

Image
பரி யோவான் கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்லூரியின் கிரிக்கட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று இலட்சிய கனவை சுமந்து கொண்டு தான்  நுழைவாயில் தாண்டுவார்கள். யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் என்றால் பரி யோவான் கல்லூரி தான்.யாழ்ப்பாணத்தின் ஒஸ்ரேலிய கிரிக்கட் அணி, பரி யோவான் கல்லூரி கிரிக்கட் அணி என்றும் சொல்லலாம். 

பரி யோவான் கல்லூரியினரின் எடுப்புக்கும் கனவான்களின் விளையாட்டான கிரிக்கட்டுக்கும் நல்ல பொருத்தம். கிரிக்கட்டில் பரி யோவான் அணியை வெல்ல வேண்டும் என்று பிற கல்லூரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார்கள்.  பரி யோவான் கல்லூரிக்கு கிரிக்கட் விளையாட வேண்டும் என்ற கனவோடு பிரதான வாயிலை கடந்து உள்நுழையும் மாணவர்களை பரி யோவானின் அழகிய மைதானம் வரவேற்கும்.

நாங்கள் படிக்கும் காலங்களில் முதலாவது தவணை வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் U19 கிரிக்கட் ஆட்டங்கள் தொடங்கி, சனிக்கிழமை முழு நாளும் நடக்கும். பள்ளிக்கூடம் முடிய மைதானத்தில் மட்ச் பார்க்க மாணவர்கள் ஓடி வருவார்கள். வெள்ளைத் தொப்பி அணிந்து ஸ்டைலாக பரி யோவான் அணி களமிறங்க, தாங்களும் களமிறங்கும் நாளை எண்ணி, மைத…

தேவி.. Rock on

Image
பிரபுதேவா என்ற ஆட்டக்காரனை, நடன இயக்குனரை, நடிகனை பிடிக்காதவர்களை இதுவரை சந்தித்ததேயில்லை. பிரபுதேவாவின் ஆடும் ஆட்டத்திலும், நெறிப்படுத்தும் நடனங்களிலும் ஒரு குறும்புத்தனம் குடிகொண்டிருக்கும், எல்லோரையும் மயக்கும் வன்மை நிறைந்திருக்கும். பிரபுதேவாவில் கிறங்கி நயன்தாராவே அவருடன் குடும்பம் நடாத்திய வரலாற்று சம்பவத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம்  பார்த்து ரசித்தது. பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சைக் குத்துமளவிற்கு நயன்தாராவின் காதல் தீவிரமாக இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

போன ஞாயிற்றுக்கிழமை மத்தியானம், வழமையாக கொள்ளும் குட்டித்தூக்கத்தை தியாகம் பண்ணிவிட்டு, குடும்பத்தோடு பிரபுதேவா பன்னிரு ஆண்டுகளிற்கு பின்னர் நடிக்கும் "தேவி" படம் பார்க்க Knox Village தியேட்டரிற்கு போனேன். இந்தக் கிழமை Knoxல் மூன்று தமிழ்ப் படங்கள் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் curry facesம் "படம் பார்க்கவோ வந்தனியள்" என்ற வழமையான விசாரிப்புகளும். படம் தொடங்கும் வரை இங்கிலீசில் புளிப்பு கதை கதைக்கும் அன்டிமாரின் தொல்லை. படம் தொடங்கினாப் பிறகு தங்கள் ப…

இரவு

Image
"இரவுக்கு ஆயிரம் கண்கள்"
இரவுகள் இனிமையானவை, இரவுகளை ரசிக்க தெரிந்தவர்களிற்கு இரவுகள் உறக்கத்திற்கு மட்டுமல்ல என்பதை அறிந்திருப்பார்கள்.  இரவுகள் நிம்மதியானவை, பகற்பொழுதின் பரபரப்பு இல்லாத அமைதியை தருபவை. இரவுகள் ஆனந்தமானவை, மனதிற்கு பரவசத்தையளிப்பவை.  இரவுகள் மகிழ்ச்சியானவை, கவலைகள் மறந்து கனவுகளுடன் கைகோர்க்கும் கணங்களுக்கானவை. "இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலிற்கு ஒன்றே ஒன்று" என்ற கண்ணதாசன் வரிகள் இரவுலாவிகளை (Nocturnals) மனதில் வைத்துத்  தான் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்.  

"காலம்பற எழும்பி படிடா, அப்பத்தான் மூளைக்குள் நிற்கும்" என்று எல்லா அம்மாமாரும் தங்கள் பிள்ளைகளிற்கு ஓதும் மந்திரம் எனக்கும் ஒதப்பட்டது. ஜந்து மணிக்கு அடிக்கும் அலார்ம் சத்தத்திற்கு எழும்பி, பேய் பிசாசுக்கு பயந்து செபம் சொல்லியபடியே ஓடிப்போய் கிணற்றடியில் முகம் கழுவி, அரை நித்திரையில் தேத்தண்ணி குடித்துவிட்டு, செல்வவடிவேலின் விஞ்ஞான விளக்கம் புத்தகத்தை திறக்க.. கொட்டாவி எட்டிப்பார்க்கும், படிப்பு மட்டும் ஏறாது.

நகுலேஸ்வரன் மாஸ்டர் காலையில் ஐந்து மணிக்கு வகுப்பு நடத்துவார். நடுங்கும் …