Posts

Showing posts from November, 2016

மாவீரர் யாரோ என்றால்....

Image
"மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது,
நான் முன்னுக்கு போகப் போறன், என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா"
ஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர் நண்பர்களோடு பலமுறை விரிவாக கதைத்திருந்த சிவகுமரனின் இந்த கடைசி  அழைப்பு,  ஓரிரு நிமிடங்களே நீடித்தது. 
----------------------------------------------------------------------------------------------------------------------
1984ல், பரி யோவானில் இணைந்த சிவகுமரன் எல்லோரோடும் பம்பலாக பழகுவான். தேவதாசன் மாஸ்டர் வகுப்பாசிரியராக இருந்த Grade 5Aல் தான் சிவகுமரன் அறிமுகமானான். எங்களது வகுப்பறை பிரின்ஸிபல் ஒஃபிஸிற்கு முன்னால் இருந்த கொட்டகையில் இருந்தது. இப்பொழுது அந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு புதிய கல்லூரி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 

சிவகுமரனின் நட்பில் வாஞ்சை மிதமிஞ்சும், வஞ்சகம் எள்ளளவும் இருக்காது.  சிவகுமரன் விடும் குழப்படிகள்,  தானும் அடிவாங்கி மற்றவர்களுக்கும் அடிவாங்கிக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. சிவகுமரனின் சொந்த ஊர் நயின…

Dravid

Image
இன்றிரவு கடவுள் தோன்றி, நாளை உன்னோடு அந்த மாதிரி  ருசியான  மட்டன் கொத்துரொட்டி சாப்பிட, உனக்கு விருப்பமான மூன்று பேரை சொல்லு, கொண்டு வந்து நிற்பாட்டுறன் என்று வரம் தந்தால், பதில் டக்கென்று வரும்.


முதலாவது, அநீதிக்கெதிராக போராட துணிவும்,  தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தையும்  உணர்வித்த தேசிய தலைவர் பிரபாகரன். இரண்டாவது கனவானாக (Gentleman) வாழ்வது எப்படி என்று களத்திலும் வாழ்விலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ராகுல் ட்ராவிட் மற்றது எங்கட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


ஜனவரி 11, 1973ல் பிறந்த இரண்டாம் நம்பர் காரனான ராகுல் ஷரத் ட்ராவிட், எனது அபிமான கிரிக்கட் வீரர் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ட்ராவிட் என்னுடைய role model & inspiration.  ட்ராவிட் ஆடுகளத்தில் ஆடும் விதம் அவரது ஆளுமையை வெளிப்படுத்தும். ஆடுகளத்திற்கு வெளியே ட்ராவிட் வாழும் விதம், எளிமையின் எடுத்துக்காட்டு. 

"ட்ராவிட் ஒரு பசையல் மன்னன், நொட்டிக் கொண்டு நிற்பான்டா, அவனைப் போய் நீ..."என்று சொன்ன நண்பர்களும் "ட்ராவிட் இஸ் போரிங்.." சொன்ன தோழர்களும் சூழ இருந்து வசை பாடி அழவைத்தும், ட்ராவிட்டை தொடர்ந்து ஆரா…

நல்லதோர் வீணை செய்து..

Image
"நல்லதோர் வீணை செய்து, அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ"
கெளதம் மேனனின் "அச்சம் என்பது மடைமயடா" படத்தை பார்த்து விட்டு வரும் போது இந்த பாரதியார் பாடல் தான் நினைவில் நிழலாடியது. மீண்டும் சிக்கல் மன்னன் சிம்புவோடு ரிஸ்க் எடுத்து கெளதம் மேனன் இணைந்து படைத்த இந்த படைப்பு, சிம்பு படங்களிற்கே உரித்தனான இழுத்தடிப்புகளையும்  தடைகளையும் தாண்டி திரைக்கு வந்திருக்கிறது. ரஹ்மானின் இசையிலமைந்த படத்தின் அருமையான இரண்டு பாடல்கள்  ஏற்கனவே படத்தின்பால் எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தன.
"அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
படத்தின் முதல் பாதி கெளதம் மேனனின் அதே ஃபோர்மிலவில் விளைந்த நல்ல காதல் கவிதை,  இருதடவை காதலில் தோற்று, love philosophy வசனம் பேசிக் கொண்டு திரியும் சிம்பு, மஞ்சிமிவை கண்ட கணம் முதல் திரையில் விரியும் காதல் காட்சிகள், கவிதை.  எங்களின் உதடுகளில் புன்னகையை வரவழைக்கும் காட்சிகளும் வசனங்களும், மனதார ரசிக்கவும் வைக்கிறது. 
"ஆறும் கரையும் அம்பும் வில்லும்பாட்டும் உறையும் நானும் அவளும்"
காதலை அழகாக திரையில் வடித்து, அற்புதமான வசனங்களால் செதுக…

வேலை அமைவதெல்லாம்

Image
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பது எவ்வளவு உண்மையோ, வேலை அமைவதும் ஆண்டவன் அருளும் வரப்பிரசாதம் என்பது உண்மையிலும் உண்மை. வேலை தேடிக்கொண்டு இருக்கும் போதும், விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கும் போதும், நேர்முகத் தேர்வுகளிற்கும் aptitude testகளிற்கும் தோன்றும் போதும், இந்த வேலை தான் எனக்கு வாய்க்க போகிறதா என்று மனம் அல்லாடும். அல்லல் நிறைந்த அந்த பயணத்தின் இறுதியில் கிடைக்கும் வேலை, ஆண்டவன் அளித்த வரப்பிரசாதம் என்று மனம் ஏற்றுக் கொண்டால், வாழ்வு வளம் பெறும். 

கொழும்பில் உயர்தர சோதனை எழுதிவிட்டு, CIMA படிக்க தொடங்கின காலம் முதல் வேலை தேடும் படலமும் ஆரம்பமாகியது. 80களின் இறுதியில் நடந்த ஜேவிபி பிரச்சினையால் கம்பஸ் தொடங்க எப்படியும் இரண்டு வருடமாவது ஆகும்.  அந்த இருவருட இடைவேளைக்குள் வேலை ஒன்றை தேடி CIMAவும் முடிக்க வேண்டும் என்று மனக்கணக்கு போட்டேன்.  வேலை எடுப்பதற்கு  influenceம் அதிர்ஷ்டமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்த கொடிய காலங்கள் அவை.


Daily Newsல் வந்த Holiday Inn ஹோட்டலில் Accounts Assistant வேலைக்கு, கையால் எழுதிய curricualam vitaeயும் பள்ளிக்கூ…

டுபாயில்..

Image
போன வருஷம் மகர ராசிகாரன்களிற்கு சனிபகவான் பதினொன்றாம் வீட்டிற்கு இடம்பெயர, இந்த வருடம் எனக்கு சில அருமையான பயணங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்தது. வேலை நிமித்தம் டுபாய்க்கு இது இரண்டாவது பயணம், போன மார்ச் மாதம் போன போது அப்படியே சுத்தி, கொழும்பு தொட்டு, யாழ்ப்பாணத்தில் இறங்கி Big Match பார்த்து, பம்பலடித்து விட்டு வந்தாச்சு.


எங்கட கம்பனியின் டுபாய் பிரிவிற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட பாக்கிஸ்தான்காரனான நிதிக் கட்டுப்பாட்டாளரை  பயிற்றுவிக்க போனமுறையும், அவர் சில குழப்படிகள் விடுவதால், "அவரை ஒருக்கா போய் வெருட்டி விட்டு வா" என்று இந்த முறையும் என்னுடைய பொஸ்,  ப்ளேன் ஏற்றி அனுப்பி வைத்தார். பாக்கிஸ்தான் சிங்கன் ஒரு சோம்பேறி, போனமுறை போன போது அவரை வேலை வாங்க நான் பட்டபாடு வையகம் அறியாது.


---------------------------------------
நவம்பர் மாதத்தின் முதலாவது நாளை கிறிஸ்தவர்கள் அனைத்து புனிதர்கள் தினமாக கொண்டாடுவார்கள். அதற்கடுத்த நாள் இறந்தவர்களை நினைவு கூறும் மரித்த விசுவாசிகளின் தினம் (All souls Day). நவம்பர் மாதம் முழுக்க நம்மை விட்டு பிரிந்தவர்களின் நினைவுகளை நினைவு கூறும் மாதம் தான்.