Posts

Showing posts from December, 2016

விடைபெறும் 2016

Image
யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணங்கள் எப்பவுமே உணர்வுபூரணமானவை. இந்து மாசமுத்திரத்தின் அலைகள் மோதும் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஒரு அதிகாலை வேளை யாழ்ப்பாணம் செல்லும் கடுகதி ரயிலில், பிதுங்கி வழியும் சூட்கேஸுகளைக் காவிக் கொண்டு, "வெளிநாட்டுக்காரர்" என்று ஊர்ச்சனம் பார்வையால் முத்திரை குத்த, ரயிலில் இருபத்தாறு ஆண்டுகளிற்கு பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பமாகியது. 

2016ம் ஆண்டு பறந்தோடியே விட்டது. எங்களிற்கு வயது ஏறுவதால் நாட்கள் வேகமாக நகர்கிறதா, இல்லை உலகம் இறக்கை கட்டி பறப்பதால், பொழுதுகளும் வேகமெடுக்கிறதா தெரியவில்லை. இந்தாண்டு உலக அரங்கில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள் 2016ஜ மறக்க முடியாத ஒரு ஆண்டாக பதிவு செய்துவிட்டன.

2016ம் ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் ஷோபா ஷக்தியின் "Box" கதைப்புத்தகம்". விறுவிறுப்பான மொழிநடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை கோப உணர்வுடன் இரு நாட்களிலேயே வாசித்து முடித்தேன். எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட…

பஹ்ரேய்ன் பசு

Image
பாரசீக வளைகுடாவில் அமைந்திருக்கும் முப்பது தீவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி இராஜ்ஜியம் தான் பஹ்ரேய்ன். மன்னராட்சி நடக்கும் ஒரு இஸ்லாமிய நாடு. பெற்றோலியத்தில் தங்கியிருந்த பொருளாதாரத்தை, அதிலிருந்து மீட்டு, நிதிச் சேவைகள் நோக்கி நகர்த்திய முதலாவது வளைகுடா நாடும் பஹ்ரேய்ன் தான். மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு தேடி எம்மவர்கள் கடல் கடக்க வெளிக்கிட்ட போது,  பஹ்ரேய்னையும் விட்டு வைக்கவில்லை.

எங்கட SJC92 பிரிவில் முதன்முதலாக மத்திய கிழக்கிற்கு போனவர் சியாமளராஜ். தொண்ணூறுகளின் மத்தியிலேலே மத்திய கிழக்கிற்கு பறந்து விட்டார். "டேய் நீங்க கொப்பி பேனையோடு தூக்கிக்கொண்டு திரிந்த நாட்களிலியே நான் தினாரில் உழைக்க தொடங்கிட்டன்" என்று லெவலடிப்பார். "எங்கட பட்சிலேயே மிடில் ஈஸ்டிற்கு முதல் முதலா வந்தது நான்தான்டா" என்று ஒரு நாள் ஸ்கைப்பில் பீத்தினார். "ஓமடா மச்சான், சந்திரனிற்கும் மனுசன் போக முதல் நாயைத் தான் அனுப்பினவங்கள்" என்று திருப்பி அடிக்க, சிரித்துவிட்டு கட் பண்ணினார்.

பத்தாண்டுகளிற்கும் மேலாக பஹ்ரேய்னில் பதுங்கியிருக்கும் இந்தப் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக Facebook ம…

ஓடு ராசா ஓடு

Image
1984ம் ஆண்டு, பரி யோவானின் Primary schoolல் கடைசி வருடம். அதற்கு முந்தைய வருடம் honours prize கிடைத்தும் வகுப்புகளிற்கிடையிலான Know your School Quiz போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றிக் கிண்ணம் வென்றும், Prefect badge கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் மனதை வாட்டியது.

இந்தாண்டு ஏதாவது சாதித்து விட்டு தான் middle schoolற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற ஓர்மம் மனதில் உருவெடுத்தது. இரண்டாம் தவணை Sports meet நெருங்க, எப்படியாவது "அந்த" ரேஸில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உறுதி மனதில் வலுத்தது. கடந்த மூன்றாண்டுகளாக "அந்த" ரேஸில் கலந்து கொண்டாலும், heats தாண்டி sports meet அன்று இடம்பெறும் இறுதிப் போட்டிக்கு தெரிவானதேயில்லை.

இந்தாண்டும் வழமை போல் Long Jumpல் முதலாவது சுற்றிலும் Cricket ball throwல் கடைசி சுற்றிலும் தோல்வியை சந்திக்க, heatsன் ஒரு சுற்றில், "அந்த" ரேஸில் முதலாவதாக வந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றேன். கடுமையான பயிற்சியும் மனதில் நிறைந்திருந்த ஓர்மமும் இறுதிச் சுற்றில் இடம்பெற வழிவகுத்துத் தந்தன.

1984ம் ஆண்டு ஆரம்பப் பிரிவில் Thompson இல்லத்த…

ஜெயலலிதா.. ஒரு பார்வை

Image
"I must say it wasn't a pleasure talking to you"
... என்று, கண்ணிமைக்காமல் நேர்கொண்ட பார்வையுடன் சொல்லிவிட்டு, கை குலுக்க கையை நீட்டிய BBC Hardtalk ஊடகவியலாளர் Karan Thaparயோடு கைகுலுக்காமல், மைக்கை கழற்றி மேசையில் டொப்பென்று போட்டு விட்டு, விருட்டென்று எழுந்து செல்லும் ஜெயலலிதாவின் 2004ம் ஆண்டு நேர்காணல், அவரது துணிச்சல் மிகுந்த ஆளுமையின் வெளிப்பாடாக அமைந்தது. 
மீடியா இப்படி சொல்லுது, சனம் அப்படி சொல்லுது பாணி கேள்விகளை கேட்ட கரனிற்கு, பொத்துக்கொண்டு வந்த ஆத்திரத்தை வெளிக்காட்டாமல், ஆணித்தரமாக பதிலடி கொடுக்கும் ஜெயலலிதாவின் அந்த பேட்டியை பார்ப்பவர்களிற்கு ஜெயலலிதா மீது நிட்சயம் ஒரு பிரமிப்பு கலந்த ஈர்ப்பு ஏற்படும். 
இந்த நேர்காணலில், தன்னை ஏன் ஊடகங்கள் குறிவைக்கின்றன என்று  ஜெயலலிதா பின்வருமாறு விபரிப்பார்.
KT: (Intervenes) You’re saying that media picks on you?
JJ: I do think so.
KT: Because you are a woman?
JJ: I don’t think it’s because I am a woman. It’s because I don’t have a background like other women political leaders of Asia. If you’ll allow me to complete a s…

மகனும் நானும்....

Image
மகள்மாரைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள், மகன்மாரைப் பெற்ற அப்பாக்கள் புண்ணியவான்கள்

நேற்றுக் காலை என்னுடைய மூத்தவனின் Primary school graduationல் கலந்து கொண்ட போது கண்கள் ஏனோ பனித்தன. உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வை உணரமுடிந்ததே தவிர, உணர்வின் ஊற்றைத் தேட மூளை மறுத்துவிட்டது. "My baby has become a boy" என்று மண்டைக்குள் ஒரு குரல் கேட்டது.

சாதுவாக மழைத் தூறிக் கொண்டிருந்த புரட்டாசி மாதத்தின் ஒரு செவ்வாய்க்கிழமை மாலைப் பொழுதில், கைக்குழந்தையாய் அவனை முதன்முதலாக கரங்களில் தாங்கினேன். உருண்டு, பிரண்டு, நடந்து, ஓடி, விழுந்து அவன் கண்முன் வளர வளர, வாழ்வில் ஒரு புதுவசந்தம் தவிழ ஆரம்பித்தது.

அம்மா சொல்ல முதல் அப்பா சொல்லி, சொற்கள் வாக்கியங்களாகி, வாக்கியங்கள் கேள்விகளாக தொடங்க, Thomas the Tank Engineல் தொடங்கிய அவனுடனான சம்பாஷணைகள் இன்று Cricket வரை வளர்ந்துவிட்டது. 

ஏழு ஆண்டுகளிற்கு முன்னர் இதே பள்ளியில், ஒரு அழகிய காலைப் பொழுதில், அவனை வகுப்பில் கொண்டு வந்து சேர்த்ததும் இன்று நினைவில் நிழலாடியது. பள்ளியில் முதல்நாள், காரிலிருந்து இறங்கி எனது கையைப் பிடித்துக்கொண்டு வந்தவன், வகுப்பற…