Posts

Showing posts from January, 2017

வீழமாட்டோம்

Image
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் சோஷலிஸம் முடிவிற்கு வர, உலகமயமாக்கல் (Globalosation) எனும் முதலாளித்துவ (Captilasm) குதிரையில் ஏறி இந்தியா, சீனா, பிரேஸில், மலேசியா உட்பட பல வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 1970களில் யுத்தத்தால் அழிவடைந்த வியட்நாமும் பங்களாதேஷும் கூட இந்த பயணத்தில் இணைந்து பயனடைய தொடங்கி விட்டன. 

1977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய தமிழினத்தை பேரினவாதம் திட்டமிட்டு அழித்த வரலாறே 1983 இனக்கலவரம். அன்றிலிருந்து இருபத்தாறு ஆண்டுகள் நாங்கள் யுத்தத்தில்  அழிவுகளை சந்தித்தது மட்டுமல்லாமல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் தவறவிட வைக்கப்பட்டோம். ஒரு புறத்தில் எங்கள் பொருளாதாரமும் வாழ்க்கை தரமும் பின்னோக்கி செல்ல, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தங்களை பொருளாதார, கல்வி, சமூக ரீதியாக பலப்படுத்திக் கொண்டு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை தமதாக்கிக் கொண்டார்கள்.

நாங்கள் மீண்டும் ஒரு பலமிக்க இனமாக மீளெழ எங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப…

வாழ்வது தமிழ்...

Image
அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்கவிடும் ஆளை
என்று தொடங்கும் பீ.சுசீலா பாடிய பாடலிற்கு பத்மினியும் தோழியரும் ஆடி முடிய, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் ஜல்லிக்கட்டு காட்சியை யாரும் மறக்க மாட்டார்கள். வெள்ளையம்மாவை (பத்மினி) மணமுடிக்க அவள் வளர்த்து வரும் காளையை வெள்ளையத்தேவன் (ஜெமினி கணேசன்) அடக்கும் காட்சி, திரைப்படத்தில் பத்து நிமிடமளவு விரியும். 
கூரான கொம்பு ரெண்டு  சீராக மின்னக்கண்டு  வீரத்தை வீரனெல்லாம்  கூறாமல் போனதுண்டு  மாறாத ஆசையுடன்  வீராப்பு பேசிக்கொண்டு  மாட்டைப் பிடிக்க வந்து  ஓட்டம் பிடித்ததுண்டு 


தமிழ்நாட்டு தமிழர்களின் பொங்கல் பண்டிகையை ஒட்டிய பண்பாட்டு நிகழ்வாக திகழும் ஜல்லிக்கட்டை, இந்திய உயர்நீதிமன்றம் தடை செய்து மூன்றாண்டுகளாகிறது. இந்தாண்டு, இந்த தடை மீண்டும் உறுதிப்படுத்தப்பட, தமிழ்நாட்டு இளைஞர்கள் வீதியில் இறங்கி தடைக்கெதிராக போராட தொடங்க, திரையுலகமும் அரசியல்வாதிகளும் ஈழத்தமிழர்களும் அவர்களுக்காதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டின் தாய் வீடான அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் யாழ்ப்பாணத்தின் நல்லூரையும் தாண்டி மெல்பேர்ண், சிட்னி, லண…