Posts

Showing posts from February, 2017

கொழும்பு இந்துவில்..

Image
1992 August மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மத்தியான நேரம்,  A/L கடைசி சோதனை, அளவையியலும் விஞ்ஞானமுறையும் (Logic) பகுதி 2, எழுதப் போய்க் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளியில் Management தாண்டுவமா இல்லை BCom தானா என்பதையும், கிளாலி தாண்டி யாழ்ப்பாண கம்பஸ் போக வேண்டுமா இல்லை கொழும்பு கம்பஸில் மரத்திற்கு கீழே இடம் பிடிக்கலாமா என்பதையும் நிர்ணயிக்கும் முக்கியமான சோதனை. 
St.Peters கல்லூரி பஸ் தரிப்பிடத்திலிறங்கி, வாழ்வில் கடைசி முறையாக வெள்ளை நிற பாடசாலை சீருடையில், மத்தியான வெய்யில் சுட்டெரிக்க, லோரன்ஸ் வீதியில் நடக்க இதயம் கனத்தது. இனிய பாடசாலை நாட்களின் பசுமையான நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் மனத்திரையில் தோன்றி மறைந்தது. கொழும்பின் புறநகர் பகுதியான அந்த பகுதியில் தரிசித்திருந்த அழகிய முகங்கள் நினைவலைகளில் மீண்டுமொரு முறை உலாவந்தன.
கிட்டத்தட்ட  இரு வருடங்களிற்கு முன்னர், இதே லோரன்ஸ் வீதியால், யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து, கொழும்பு இந்துக் கல்லூரியில் அனுமதி கேட்டு, அப்போதிருந்த அதிபரால் அனுமதி நிராகரிக்கப்பட்ட சொல்லொண்ணா வேதனையோடு,  அம்…

ரயிலில் யாழ்ப்பாணத்திற்கு

Image
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் பயணங்கள் எப்பவுமே இனிமையானவை, என்றும் நினைவில் நிற்பவை. சிறுவர்களாக இந்த ரயில் பயணங்களை அனுபவித்த நிகழ்வுகள் அடிக்கடி எண்ண அலைகளில் வந்து போகும். பாடசாலை விடுமுறை நாட்களை கழிக்க யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து போன பயணங்கள் மனதில் பசுமையாக பதிந்து விட்டன. அரச உத்தியோகத்தர்களான அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கிடைக்கும் ரயில் warrant ஒரு வரப்பிரசாதம், அதுவும் மெயில் ரயிலில் berth கிடைத்த சந்தர்ப்பத்தை மறக்கேலாது. 

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில், காலம்பற ஆறேகால் யாழ்தேவி பிடிக்க, அஞ்சரை மணிக்கு தேவன் அண்ணேயின் பழைய மொரிஸ் மைனர் கார் வரும். இளநீல நிற தேவன் அண்ணேன்ட காரில் போய், நிரம்பி வழியும் யாழ் ரயில் நிலையத்தில் இறங்கி, காங்கேசன்துறையிலிருந்து வரும் யாழ் தேவி ரயிலின் என்ஜினை பார்த்து பரவசப்பட்டு, அவசர அவசரமாக ரயிலில் ஏறி, தம்பியோடு யன்னல் கரை சீட் பிடிக்க சண்டை பிடித்து முடிய, நாவற்குழி பாலத்தை ரயில் கடகடவென கடக்கும். 

இந்த முறை யாழ்ப்பாணம் போவது என்று முடிவெடுத்ததும், அருள்மொழியிடம் சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பே ஏசி ரயிலில் டிக்கெட் பதிவு செய்தோம். …

ஒரு நாள் ஜொனியன்ஸ்..

Image
"டேய் என்ட நகைகளை  அடைகு வச்சு,  டொனேஷன் கட்டித் தான் உன்னை சென் ஜோன்ஸில் சேர்த்தனான்" அம்மா ஒவ்வொரு வருஷமும் மெல்பேர்ண் OBAயின் Dinner Dance வரும்போதும் மறக்காமல் ஞாபகப்படுத்துவா. 1977 இனக்கலவரத்திற்கு பின், மீண்டும் யாழ்ப்பாணம்  செல்ல முடிவெடுத்த போது, சென். பற்றிக்ஸில் படித்த என்னுடைய அப்பா எனக்கு தெரிந்தெடுத்தது சென்.ஜோன்ஸில் கொலீஜ். 
ஜொனியன்ஸிற்கு தங்கள் கல்லூரியின் மேல் பற்று கொஞ்சம் அதிகம். பரி யோவானின் தண்ணியில் என்ன இருக்கிறதோ தெரியாது, பள்ளிக்கூட வளாகத்தை விட்டு பிரிந்த பின்பும் பரி யோவான் நாட்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பீத்துவது ஜொனியன்ஸின் தனிச் சிறப்பியல்பு. ஜொனியன்ஸின் இந்த பீத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது ஜொனியன்ஸிற்கு வாழ்க்கைப்பட்ட புண்ணியவதிகளும் அவர்தம் பிள்ளைகளும் தான். 


விடுமுறை முடிந்து 2017ம் ஆண்டிற்கு பரி யோவான் மீண்டும் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்த போது, அதிபர் வண. ஞானபொன்ராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. "சேர் என்ட பெடியங்களை ஒரு நாள் ஸ்கூலில் கொண்டு வந்து படிக்க விடவா"…

மண்ணுக்காக

Image
கிளிநொச்சி.. பெயரை கேட்டதுமே மனதில் ஒரு ஏக்கம் வரும். விடுதலைப் புலிகள் கோலோச்சிய காலத்தில் கிளிநொச்சிக்கு சென்று வந்தவர்கள், இன்றும் கிளிநொச்சியை கடக்கும் போது, அந்தக் காலத்தில் கண்டி வீதியின் இருமருங்கிலும் இருந்த காவல் துறை அலுவலகத்தையும், தமிழீழ நீதிமன்றத்தையும், சமாதான செயலக ஒழுங்கையையும், பாண்டியன் சுவையகத்தையும் மனக்கண் முன் கொண்டு வராமல் கிளிநொச்சி கடக்க மாட்டார்கள். 

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வீதியில் கிளிநொச்சி நோக்கிச் சென்று ஆனையிறவு வெற்றிச் சின்னங்களை பார்த்து கவலையை வளர்த்து கொள்வதை தவிர்க்கவும், சங்குப்பிட்டி பாதையின் அமைதியான அழகிற்காகவும், கைதடியிலிருந்து பூநகரி சென்று அங்கிருந்து பரந்தன் சந்தியை அடைந்து,  கிளிநொச்சி நகரை அடைந்தோம். காலை வெய்யில் ஏறிக் கொண்டிருந்த அழகிய பொழுதில், கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அண்மையில் இயங்கும் அம்மாச்சி உணவகத்தில் தம்பி தீபச்செல்வனின் வரவிற்காய் காத்திருந்த சில கணங்களில், அந்தப் பழைய கட்டிடங்கள் கண்முன் ஓடி மறைந்தன.

வடமாகாண விவசாய அமைச்சின் முன்னெடுப்பில் பாரம்பரிய உணவுகளை சுடச்சுட தயாரித்து வழங்கும் உணவகமாக அம்மாச்சி உணவகம் இயங்கு…