Posts

Showing posts from March, 2017

அந்த ஒரு மணித்தியாலம்... 1982 Big Match

Image
194 ஆண்டுகால பழமை வாய்ந்த பரி யோவான் கல்லூரிக்கு என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. அந்த சிறப்பம்சங்களில் பிரதானமானது, காலங் காலமாக, தலைமுறை தலைமுறையாக, பேணப்பட்டும் காவப்பட்டும் வரும் விழுமியங்கள் (Values). பாடசாலையின் பிரதான வாயிலின் முகப்பைத் தாண்டி உள்நுழையும் ஒவ்வொரு மாணவனிலும் ஏதோ ஒரு வகையில் இந்த விழுமியங்கள் உள்நுழைக்கப்படும், மாணவனாலும் உள்வாங்கப்படும்.

பரி யோவானின் விழுமியங்கள் காலங்கள் கடந்தும் அந்த மாணவனின் வாழ்வில் நிலைத்து நிற்கும். வாழ்விலே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சவால்களை
சந்திக்கும் போது இந்த விழுமியங்களே ஜொனியன்ஸிற்கு கைகொடுக்கும்.

Pitch may be bumby
Light may be blinding, but
Johnians always play the game

என்ற வாசகங்கள், ஜொனியன்ஸ் விளையாட்டுக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கை எனும் களத்திலும் என்றுமே கடைசி வரை போராட வேண்டும், அதுவும் நேர்மையாக போராட வேண்டும் என்ற நற்பண்பை வலியுறுத்த, ஒவ்வொரு ஜொனியினின் மண்டைக்குள்ளும் விதைக்கப்படும் விழுமியம், தாரக மந்திரம்.

1982 Big Matchல் பரி யோவான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 126/9 என்ற இக்கட்டான நிலையில் நின்ற போது, களத்தில் நின்ற விக்…

வெற்றியின் விளிம்பில்..1982 Big Match

Image
யாழ்ப்பாணத்தின் மிடுக்கு போல கம்பீரமாக நிமிர்ந்து நின்ற யாழ் மணிக்கூட்டு கோபுரத்தில் காலை ஒன்பது மணியடிக்க, umpire சொன்ன "play", மைதானத்தில் எழுந்த விண்ணதிரும் கோஷங்களிலும் கரகோஷத்திலும் கரைந்து போக, யாழ் மத்திய கல்லூரி அணியின் தலைவர் தோமஸ், 84வது வடக்கின் பெரும் போரின் முதலாவது பந்தை, பரி யோவான் கல்லூரி அணியின் தலைவர் DM ரவீந்திராவை நோக்கி வீச ஓடி வந்து கொண்டிருந்தார். 
பரி யோவான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான DM ரவீந்திராவும் DS ஞானரட்ணமும் நிதானமாக துடுப்பெடுத்தாடினார்கள். சுப்ரமணியம் பூங்கா முனையிலிருந்தும் மணிக்கூட்டு கோபுர முனையிலிருந்தும் மத்திய கல்லூரியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான தோமஸ், உமாசுதன், சுதர்ஷனன், மனோஜ்குமார் விசிய பந்துகளை லாவகமாக விளையாடி, பரி யோவான் அணி ஓட்டங்களை குவித்துக் கொண்டிருந்து. 
மத்திய கல்லூரி மைதானத்தின் யாழ் பொது நூலகம்  பக்கம் பரி யோவான் மாணவர்களிற்கும், மைதானத்தின் மறுமுனையான மத்திய கல்லூரி பக்கம் மத்திய கல்லூரி ஆதரவாளர்களிற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இரு கல்லூரி கொடிகளும் காற்றில் பறந்தாட, தகர டப்பாக்கள் மேளங்களாக, தங்க…

1982 Big Match

Image
1982ம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் சனிக்கிழமை, எட்டு வயது சிறுவனாக, "இன்றைக்கு அங்க பிரச்சினை வரும்... போகாதே" என்ற அம்மாவின் அநியாய கட்டளையை, அப்பாவின் மென்வலுவால் வென்று, 84வது வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும், பரி யோவான் - மத்தியா கல்லூரி அணிகளிற்கிடையிலான Big Match பார்க்க கிடைத்த சந்தர்ப்பம் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம்.

தலையில் கறுத்த தொப்பி, சிவப்பு கறுப்பு டீஷேர்ட், கறுப்பு களுசான், கையில் பஸ்தியான் கடையடி டெயிலரிடம் வாங்கிய சின்ன Red & Black கொடி, கழுத்தில் தொங்கிய Drink Bottleல் தவசீலன் கடையில் வாங்கி நிரப்பிய cream soda, பொக்கற்றில் பத்து ரூபா காசு இவற்றோடு அப்பா காலையில் கொண்டு வந்து, சிங்கள பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தடியில் இறக்கி விட்டது இன்றும் நினைவில் நிழலாடுகிறது. 
கொளுத்தும் யாழ்ப்பாண வெய்யிலில், யாழ்ப்பாண கிரிக்கட் வரலாற்றில் அழியாத இடம் பிடித்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை அன்று பார்த்த பரவசம் இன்றும் நினைவை விட்டு அகலவில்லை. முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்னர் அந்த ஆட்டத்தை கண்டுகளித்த யாருமே இன்று வரை அந்த கடைசி நாளை, குறிப்ப…

கொழும்பு இந்துவின் கொமர்ஸ்காரன்கள்

Image
1992ம் ஆண்டு கொழும்பு இந்துவில் கொமர்ஸ்காரன்கள் கோலோச்சிய ஒரு அற்புதமான ஆண்டு. கொழும்பு இந்துவின் வரலாற்றில் முதல்தடவையாக கொமர்ஸ் பிரிவிலிலிருந்து Head Prefect தெரிவான ஆண்டு 1992. நண்பன் கறுப்பையா ரமேஷ், கொழும்பு இந்துவின் HP ஆக தெரிவாக, ஆருயிர் நண்பன் வசந்தன் கொழும்பு இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய தலைவராக தெரிவானான். 

1983ம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பு இந்துவில் உயர்தர மாணவர் மன்றம் செயற்படத் தொடங்கிய ஆண்டாக 1992 அமைந்தது. உயர்தர மாணவர்களின் நலன்களைப் பேண செயற்படத் தொடங்கிய இந்தச் சங்கம், நினைவில் நிலைத்த ஒரு  இரவு விருந்துபசாரத்தை, 1992 உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடையாக, கல்லூரியில் அரங்கேற்றியது. கொழும்பில் தமிழ் பிரிவு இருக்கும் அனைத்து ஆண் பெண் பாடசாலைகளிற்கும் அவர்தம் பிரதிநிதிகளை அனுப்ப அழைப்புக்கள் அனுப்பப்பட்டன, ஆனால் கலந்து கொண்டதோ இந்து மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி, மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி மாணவிகள் மட்டுமே. 
1992 உயர்தர மாணவர் ஒன்றியத்தின் இரவு விருந்துபசாரத்தை ஒழுங்கமைக்க அனைத்து மாணவர்களும்  ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைத்தார்கள். விழாவின் சிறப்பு மலரும்…